t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.11.2026 - கல்விச்சுடர்

Now Online


Recent Posts Widget

12 November 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.11.2026


திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:53. சுற்றந் தழால்

குறள் எண்:528

குறள்:

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.

பொருள்:

அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

பழமொழி :
Union is strength.

ஒற்றுமையே பலம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கொடுத்த நேரத்திற்குள் என் பணிகளைச் செய்து முடித்து, வாழ்க்கையில் நேரத்தை எப்போதும் மதித்துப் நடப்பேன்.

2. வகுப்பறையிலும் பள்ளியிலும் அமைதியைக் காத்து, ஆசிரியர்களின் கற்பித்தலுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.

பொன்மொழி : 

கல்வி என்பது வேலைவாய்ப்பிற்கான வழி மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் உயர்த்தும் ஒளிவிளக்காகும்!

Thought for the Day :

Education is not merely a path to employment; it is the guiding light that elevates every human life.

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?' 

துளி' திட்டம்.

2. தமிழ்நாட்டின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் கட்டணம் இல்லா தொலைபேசி எண் எது? 

 1091. 

English words :

1. Alleviate - தணி - Relieve

2. Conundrum - புதிர் - Dilemma

புவியியலும் சுற்றுசூழலும் :

எஞ்சிய கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுதல்

மறுபயன்படுத்தவோ மறுசுழற்சி செய்யவோ முடியாத எஞ்சிய கழிவுகள் உரிய விதிமுறைகளின்படி பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகின்றன.

NMMS :

MAT 

பின்வரும் தொடரில் வேறுபட்ட எண்ணைக் கண்டறிக: 24, 27, 31, 33, 36, 39

A. 24

B. 31

C. 36

D. 39

விடை: B.31
நவம்பர் 12

உலக நுரையீரல் அழற்சி நாள்

உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) என்பது நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும். சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் முதலாவது உலக நுரையீரல் அழற்சி நாளை கொண்டாடின. 2010 முதல் இது நவம்பர் 12 ஆம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகளாவிய அளவில் நியூமோனியா நோய் தாக்கத்தால் ஆண்டுக்கு சராசரியாக 1.6 மில்லியன் பேர் இறக்கின்றனர். 5 வயதிற்கும் குறைந்த 155 மில்லியன் குழந்தைகள் பாதிப்படைகின்றனர். இது எயிட்சு, மலேரியா, எலும்புருக்கி நோய் போன்றவற்றினால் இறப்பு ஏற்படுவதை விட அதிகம் என மருத்துவ சங்க குறிப்பு தெரிவிக்கின்றது.

சலிம் அலி அவர்களின் பிறந்தநாள்... 

சலிம் அலி (Sálim Ali; நவம்பர் 12, 1896 – சூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலிம் அலியின் முழுப்பெயர் சலிம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும்.இவர் இந்தியாவில் முதன்முதலில்பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.

சலிம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

“இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan) மற்றும் தன்வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) ஆகிய நூல்கள் சலிம் அலியின் முக்கிய நூல்களாகும்.
நீதிக்கதை

 🌸 பணிவாகப் பேசுதல் சிறந்த பண்பு 🌸

ஒரு அழகான காட்டில் பல விலங்குகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. அந்தக் காட்டில் ஒரு சிறிய முயலும், ஒரு யானையும், ஒரு மானும், ஒரு அணிலும் வாழ்ந்து வந்தன.

அந்தக் காட்டில் ஒரு குட்டி முயல் மிகவும் புத்திசாலியாக இருந்தது. ஆனால், அது மற்றவர்களிடம் மிகவும் கடுமையாகவும் ஆணவமாகவும் பேசும் பழக்கம் கொண்டிருந்தது.

ஒருநாள் முயல் காட்டில் நடந்து சென்றபோது, ஒரு சிறிய அணிலைச் சந்தித்தது.

அணில்: முயலே! எப்படி இருக்கிறாய்?

முயல்: அதைப் பற்றி உனக்கென்ன கவலை? உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ!

அணில் வருத்தத்துடன் அங்கிருந்து சென்றது.

சிறிது தூரம் சென்ற முயல், ஒரு மானைப் பார்த்தது.

மான்: முயலே! இன்று நம்முடன் விளையாட வருகிறாயா?

முயல்: உங்களுடன் விளையாட எனக்கு நேரமில்லை. நான் மிகவும் முக்கியமானவன்!

மான் எதுவும் பேசாமல் சென்றது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வயதான ஆந்தை, முயலுக்கு நல்ல அறிவுரை கூற நினைத்தது.

ஆந்தை: முயலே! உன்னிடம்  நல்ல திறமை இருக்கிறது. ஆனால், நீ பேசும் விதம் மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறது. இனிமையாகவும் பணிவாகவும் பேசக் கற்றுக்கொள்.

முயல்: நான் ஏன் மற்றவர்களிடம் பணிவாகப் பேச வேண்டும்? நான் நினைப்பதை அப்படியே பேசுவேன்!

சில நாட்களுக்குப் பிறகு, முயல் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தில் தவறி விழுந்தது. வெளியே வர முடியாமல் தவித்தது.

உதவி கேட்டு முயல் சத்தமிட்டது.

அந்த வழியாக வந்த அணிலும் மானும் அதன் சத்தத்தைக் கேட்டன. முயல் முன்பு தங்களிடம் கடுமையாகப் பேசியிருந்தாலும், அவை அதற்கு உதவ முன்வந்தன. யானையையும் அழைத்து வந்தன.

யானை தனது தும்பிக்கையால் முயலைப் பாதுகாப்பாக வெளியே தூக்கியது.

தான் தவறாகப் பேசியவர்களே தனக்கு உதவியதைக் கண்டு முயல் மிகவும் வெட்கப்பட்டது.

முயல்: என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களிடம் அன்பாகவும் பணிவாகவும் பேசியிருக்க வேண்டும். இனிமேல் யாரிடமும் கடுமையாகப் பேசமாட்டேன்.

ஆந்தை: மிகவும் நல்லது! நம்முடைய பேச்சு மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுக்க வேண்டும்.

அன்றிலிருந்து முயல் அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கியது. காட்டில் அனைவருக்கும் பிடித்த நண்பனாக மாறியது.

### 🌷 நீதிக்கருத்து:

பணிவான பேச்சு மனிதனுக்கு அழகு சேர்க்கும். இனிமையாகப் பேசுவது மற்றவர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றுத்தரும்.

 🌟 மாணவர்களுக்கான பொன்மொழி

"நல்ல வார்த்தைகள் பேச அதிகச் செலவு இல்லை; ஆனால் அவை பிறர் மனதில் அளவற்ற மகிழ்ச்சியைத் தருகின்றன."

இன்றைய செய்திகள்

12.11.2026

🗒️தமிழ்நாட்டில் ரூ. 1,370 கோடி புதிய முதலீடுகள்; தொழில் துறை அமைச்சருடன் நிறுவன தலைவர்கள் சந்தித்தனர்.

🗒️பிரதமர் மோடி கர்நாடகா, குஜராத்திற்கு 2 நாள் பயணம்
அடுத்த நாள் (14-ந்தேதி) குஜராத் செல்கிறார்.

🗒️புற்றுநோய், இதய
நோய்களுக்கு 10 ஆண்டுகளுக்குள் தீர்வு என பிரபல AI நிறுவனத்தின் CEO நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏃🏻‍♀️தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் - பெனால்டி கோலால் மாலத்தீவை வீழ்த்திய இந்தியா... அரையிறுதிக்கு முன்னேற்றம்.

🏃🏻‍♀️உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் - வெண்கலம் வென்ற நிரஜ் குமார்.

Today's Headlines

🗒️ New investments worth Rs. 1,370 crore are coming to Tamil Nadu. Company leaders met the Industries Minister.

🗒️ Prime Minister Narendra Modi will visit Karnataka and Gujarat for two days. He will visit Gujarat on the 14th.

🗒️ The CEO of a famous AI company believes that cancer and heart diseases may be cured within the next 10 years.

🏀 Sports News

🏃🏻‍♀️ South Asian Football Championship: India defeated Maldives through a penalty goal and entered the semi-finals.

🏃🏻‍♀️ World Shooting Championship: Neeraj Kumar won a bronze medal.


JOIN KALVICHUDAR CHANNEL