t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.11.2026 - கல்விச்சுடர்

Now Online


Recent Posts Widget

19 November 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.11.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:55.செங்கோன்மை

குறள் எண்:543

குறள்:

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

பொருள்:

அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

பழமொழி :
Waste not ; want not.

இருப்பதை விட்டு இல்லாததற்கு அலையாதே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நம் உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் செயல்களும் நல்ல செயல்களாக அமையும் . 

 2. பள்ளிக்குத் தினமும் சரியான நேரத்திற்கு வருவேன்; நேரந்தவறாமையை என் வாழ்வில் கடைப்பிடிப்பேன்.

பொன்மொழி : 

உண்மையை உரக்கச் சொல்லும் துணிவே பத்திரிகைத்துறையின் பெருமை; வேறுபாடுகளை மதிக்கும் பண்பே மனிதநேயத்தின் உயர்வு!

Thought for the Day :

The courage to speak the truth is the pride of journalism; respecting differences is the highest expression of humanity.

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 

2009. 

2. செம்மொழி அந்தஸ்து பெற்ற முதல் இந்திய மொழி எது? 

தமிழ் மொழி. 

English words :

1. Obstinate - பிடிவாதமான - Stubborn

2. Placid - சாந்தமான - Calm

புவியியலும் சுற்றுசூழலும் :

எஞ்சிய கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுதல்

மறுபயன்படுத்தவோ மறுசுழற்சி செய்யவோ முடியாத எஞ்சிய கழிவுகள் உரிய விதிமுறைகளின்படி பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகின்றன.

NMMS :

MAT 

பிரியா, “ராஜ் என் தாயின் ஒரே மகனின் சகோதரர்” என்கிறார். ராஜ் பிரியாவுக்கு என்ன உறவு?

A. Father / தந்தை 

B. Uncle / மாமா 

C. Brother / சகோதரர்

 D. Cousin / உறவுச் சகோதரர்


விடை: C) சகோதரர்
நவம்பர் 19

இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள்


இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தியாக மாறினார்.இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

உலகக் கழிவறை நாள்

உலகக் கழிவறை நாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.[1] அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே.
நீதிக்கதை

 🦚 அதிக அகந்தை அழிவுக்குக் காரணம்

ஒரு அழகான காட்டில் சிங்கம் ஒன்று அரசனாக ஆட்சி செய்து வந்தது. அந்தக் காட்டில் ஒரு யானை, மான், முயல், குரங்கு, மயில் போன்ற பல விலங்குகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.

அந்தக் காட்டில் ஒரு மயில் மிகவும் அழகாக இருந்தது. அதன் வண்ணமயமான தோகையைக் கண்டு மற்ற விலங்குகள் அதைப் பாராட்டின. இதனால் மயிலுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அகந்தை அதிகரித்தது.

மயில் மற்ற பறவைகளையும் விலங்குகளையும் மதிக்காமல் நடந்து கொண்டது. தன்னுடைய அழகைப் பற்றியே பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தது.

ஒருநாள் காட்டில் ஒரு பெரிய விழா நடைபெற்றது. எல்லா விலங்குகளும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து விழாவைச் சிறப்பித்தன. ஆனால் மயில் மட்டும் தனது அழகுதான் அந்த விழாவிற்கு முக்கியம் என்று நினைத்தது.

அப்போது ஒரு சிறிய குருவி விழா பொறுப்பாளரான புள்ளி மானிடம் வந்து, தானும் ஏதாவது உதவி செய்ய விரும்புவதாகக் கூறியது.

அதை அருகில் இருந்து பார்த்த மயில், "உன்னால் என்ன செய்ய முடியும்? என்னைப் போல அழகும் சிறப்பும் உனக்கு இருக்கிறதா?" என்று ஏளனமாகப் பேசியது.

குருவி வருத்தத்துடன் அங்கிருந்து சென்றது.

சிறிது நேரத்தில் திடீரெனப் பலத்த காற்றுடன் வீசத்  தொடங்கியது. விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த அலங்காரங்கள் அனைத்தும் கலைந்து போயின. மயில் தனது அழகான தோகையை விரித்துக்கொண்டு ஓர் இடத்தில் நின்றது. ஆனால் பலத்த காற்றினால் அதனால் அங்கிருந்து நகர முடியவில்லை. அதன் அழகை காண்பித்து பெருமைப் பட முடியவில்லை. இதனால் பெரும் கோபம் அடைந்த மயில் காற்று அடிப்பதை பொருட்படுத்தாமல் அகந்தை கொண்டு நடனம் ஆடியது. ஆனால் அதிக காற்றினால் ஒரு பெரிய மரம் அதன் மீது விழுந்து அதன் தோகையை முறித்து போட்டது. அகந்தை அழிவு என்பதை உணர்ந்த மயில் வெட்கத்தோடு அங்கிருந்து சென்றது. ஆனால் குருவி அதற்கு ஆறுதல் சொல்லியது. மற்ற விலங்கு பறவைகளும் அதை ஆறுதல் படுத்தின.

மயில் தனது தவறை உணர்ந்து, குருவியிடம் மற்றும் மற்ற விலங்குகளிடம் மன்னிப்புக் கேட்டது.

" இனிமேல் யாரையும் தாழ்வாக நினைக்க மாட்டேன்" என்று கூறியது.

அன்றிலிருந்து மயில் தனது அகந்தையை விட்டுவிட்டு, அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் நடந்துகொண்டது.

நீதி: அகந்தை மனிதனின் அழிவுக்குக் காரணமாகும். எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் பணிவுடன் வாழ வேண்டும். பிறரை ஒருபோதும் தாழ்வாக எண்ணக்கூடாது.

பொன்மொழி:

"அகந்தை நம்மை உயர்த்துவது போல் தோன்றினாலும், இறுதியில் நம்மை வீழ்த்திவிடும். பணிவே உண்மையான உயர்வு!"

இன்றைய செய்திகள்

19.11.2026

🗒️ரூ.2.50 கோடியில் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தின் புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அமைய உள்ளதாகத் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

🗒️கடல்சார் உளவுப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய கடற்படை சாதனை.

🗒️ இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏃🏻‍♀️முதல் செட்டில் ஆட்டம் இழந்தும் போராடி வென்ற லக்சயா சென், ஹாங்காங் ஓபனில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

🏃🏻‍♀️சதம் அடித்த ஒரே போட்டியில் 34 இடங்களைத் தாவிய டாம் பான்டன். I C C தரவரிசையில் அதிரடி.

Today's Headlines

🗒️ The Tamil Nadu Government has announced new infrastructure projects for the Tamil Nadu Textile Corporation at a cost of Rs. 2.50 crore.

🗒️ The Indian Navy has achieved a milestone by completing 50 years of maritime intelligence service.

🗒️ "India and Japan should further strengthen their cooperation," said Union Minister S. Jaishankar.

🏀 Sports News

🏃🏻‍♀️ Lakshya Sen fought back and won the match even after losing the first set. He has entered the next round of the Hong Kong Open.

🏃🏻‍♀️ Tom Banton moved up 34 places in the ICC rankings after scoring a century in a single match.


JOIN KALVICHUDAR CHANNEL