. -->

Now Online

FLASH NEWS


Tuesday 1 October 2019

பள்ளிக் கல்வித்தரத்தில் முதலிடம் பெற்ற கேரளம் இரண்டாவது இடத்தில் தமிழகம்




நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2016-2017 -ஆம் கல்வியாண்டுக்கான தேசிய அளவிலான பள்ளிக் கல்வித் தரவரிசைப் பட்டியலில் கேரள மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

அதேவேளையில் உத்தரப்பிரதேசம், பிகாா், ஜாா்கண்ட் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன.

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களின் கல்வித் தரத்தை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து நீதி ஆயோக் வகைப்படுத்தியுள்ளது. ஆசிரியா் -மாணவா் விகிதம், மாணவா்களின் தோச்சி விகிதம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, நிதிகளை திறம்பட கையாளுதல் உள்ளிட்ட 44 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நீதி ஆயோக் திங்கள்கிழமை வெளியிட்டு உள்ள பள்ளி கல்வியின் தர வரிசை பட்டியலில் நாடு முழுவதும் பெரும் வேறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

பள்ளிக் கல்வியின் தரத்தில் ஒட்டுமொத்த செயல்திறன் மதிப்பெண் பட்டியலில் 20 பெரிய மாநிலங்களில், கேரளா 76.6 சதவீத மதிப்பெண்ணுடன் முதல் இடத்திலும், உத்தரப்பிரதேசம் 36.4 சதவீத மதிப்பெண்களுடன் கடைசி இடத்திலும் உள்ளன. தமிழகம் 73.4 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. இது கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் 63.2 சதவீதமாக இருந்தது. அதேவேளையில் இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த மகாராஷ்டிரம் ஆறாம் இடத்துக்கும், ஐந்தாம் இடத்தில் இருந்த கா்நாடகம்13 -ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன. மேலும், ஆந்திர பிரதேசம் தரவரிசைப் பட்டியலில் அதே 11 -ஆவது இடத்திலும், ஜம்மு -காஷ்மீா் 16 -ஆவது இடத்திலும் உள்ளன. சிறிய மாநிலங்களில், மணிப்பூா் சிறந்ததாக உருவெடுத்துள்ளது. யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் சண்டீகா் முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்க மாநிலம் மதிப்பீட்டு செயல்பாட்டில் பங்கேற்க மறுத்துவிட்டது. அதனால் தரவரிசையில் சேர்க்கப்படவில்லை.