. -->

Now Online

FLASH NEWS


Thursday 31 October 2019

பெண்களுக்கு இலவச பயண திட்டம் பஸ்சில் சென்று முதல்வர் ஆய்வு*


 அக். 31-இலவச பஸ் பயணத் திட்டம் குறித்து, பெண்களிடம் கருத்து கேட்பதற்காக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று பஸ்சில் பயணம் செய்தார்.டில்லியில், 5,600 அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதில், பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம், நேற்று முன் தினம் முதல் அமலுக்கு வந்தது. இத்திட்டத்திற்காக, 140 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, பிரத்யேகமான 'பிங்க்' நிறத்திலான 'டிக்கெட்'கள் வழங்கப்படுகின்றன.சிக்கல்இந்த டிக்கெட்டுகளை வினியோகிக்கும் பஸ் நிறுவனங்கள், அதற்கான தொகையை, டில்லி அரசிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இலவச பஸ் திட்டம், எவ்வாறு நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பதை அறிய, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று பஸ்சில் பயணம் செய்தார்.

அப்போது, பெண்களிடம் இத்திட்டம் குறித்து அவர் விளக்கினார். மேலும், இதில் ஏதாவது நடைமுறை சிக்கல்கள் உள்ளனவா என்பதையும் கேட்டறிந்தார்.மகிழ்ச்சிஇது குறித்து, அரவிந்த் கெஜ்ரிவால், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியுள்ளதாவது:

மாணவியர், பணிக்கு செல்லும் பெண்கள், கடைகள் மற்றும் மருத்துவனை செல்வோர் என, பலதரப்பட்ட பெண்களை, பஸ்சில் சந்தித்து பேசினேன். இத்திட்டம் குறித்து, அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.பஸ்சில் பெண்களை கேலி செய்பவர்களை பிடித்து தண்டிக்க, பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்தனர்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

டில்லியில், நேற்று முன்தினம், 13.65 லட்சம் பேர், பஸ்களில் பயணித்தனர். இதில், 4.77 லட்சம் பெண்கள், இலவசமாக பயணித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில், விவசாய கழிவுகள் பெருமளவில் எரிக்கப்படுவதை அடுத்து, டில்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

நகர் முழுவதும், கரும் புகை சூழ்ந்துள்ளது. வாகனங்களில் செல்வோர், கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.இதையடுத்து, 'டில்லியைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச முக கவசம் வழங்கப்படும்' என, முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்த முக கவசங்களை, ஒரு வாரத்திற்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.