திருவள்ளூர் அடுத்த, மணவாளநகரில் உள்ளது, அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில், 580 மாணவர்களும், 189 மாணவியர் என, மொத்தம், 769 பேர், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் படிக்கும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி நேரம் முடிந்த பின், இரவு, 8:00 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன.அதாவது, படிப்பில் பின்தங்கிய, 120 மாணவர்களுக்கு, பள்ளி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன. இது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.சிற்றுண்டிஇவ்வாறு, சிறப்பு வகுப்பில் படிக்கும் 120க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள், வணிகர் சங்கங்கள் உதவியுடன், சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.மேலும், பள்ளி வளாகம் சீரமைக்கப்பட்டு, பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு, இரவு நேரங்களில், பள்ளி வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலிக்கப்பட்டு, இரவும், பகல் போல் காட்சியளிக்கிறது.இது மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இதேபோல் பள்ளி நுாலகம், தனியார் பள்ளிக்கு இணையாக, 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.சிறப்பு வகுப்புஇதனால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம், தாங்களும் அரசு பள்ளியில் படிக்கலாமோ என்ற ஆசையை துாண்டுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகர் கூறியதாவது:எங்கள் பள்ளியில், இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் சிறப்பு வகுப்புகளால், கடந்த ஆண்டு அரசு தேர்வில், 98 சதவீதம், மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.எங்கள் பள்ளியில், சிறப்பு வகுப்பில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பாடங்கள் வாரியாக, ஆசிரியர்கள் தகுந்த விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.இதனால், மாணவர்கள் அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும்.ஒத்துழைப்புமேலும், எங்கள் பள்ளி ஆசிரியர்கள், மக்கள், தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்போடு தனியார் பள்ளிக்கு நிகராக, அரசு பள்ளியை உயர்த்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதேபோல், பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ தொண்டு முயற்சியால், காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை மாணவர்களுக்காக எங்களை அர்ப்பணித்து வருகிறோம் என்றும் தலைமையாசிரியர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.எனவே, இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
26 November 2019
தனியார் பள்ளிக்கு நிகராக மணவாளநகர் அரசு பள்ளி... அசத்தல்!