t> கல்விச்சுடர் அரசு பள்ளி பூட்டிக் கிடந்ததால் மாணவர்கள் ஏமாற்றம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

4 December 2019

அரசு பள்ளி பூட்டிக் கிடந்ததால் மாணவர்கள் ஏமாற்றம்

மங்கலம்பேட்டை அரசு துவக்க பள்ளி பூட்டிக்கிடந்ததால், பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடலுார் மாவட்ட பள்ளிகளுக்கு கடந்த திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டது.நேற்று முன்தினம் இரவு கடலுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பலத்த மழை பெய்தது.இதனால் கடலுார் மாவட்டத்தில் உள்ள கடலுார், வடலுார், சிதம்பரம் கல்வி மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளி விடுமுறை எனவும், விருத்தாசலம் கல்வி மாவட்ட பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்திருந்தார்.அதன்படி, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டிருந்த நிலையில், மங்கலம்பேட்டை அரசு துவக்கப் பள்ளி மட்டும் பூட்டிக்கிடந்தது. இதனால் காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.இதுகுறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில்; கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர்மழையினால், பள்ளி கட்டடத்தில் தண்ணீர் கசிவு இருந்தது.இது குறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்றார்.


JOIN KALVICHUDAR CHANNEL