. -->

Now Online

FLASH NEWS


Friday 6 December 2019

தேர்தல் ஆணையம் வாபஸ் - உள்ளாட்சி தேர்தல் சந்தேகம்...








தேர்தல் அறிவிப்பு வாபஸ்..!

உச்சநீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில், கடந்த 2ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதித்த உச்சநீதிமன்றம், புதிய அறிவிப்பாணை வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புகளிலும் மாற்றங்களை செய்ய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக படித்து முடித்து, ஆய்வு செய்த பின்னரே, புதிய அறிவிப்பாணை உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கவிருந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை, வேட்பு மனுக்களை பெற வேண்டாம் என தமிழ்நாடு மாநிலம் தேர்தல் ஆணையம், இன்று காலையில் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.