. -->

Now Online

FLASH NEWS


Sunday 5 January 2020

3 - ஆம் பருவத்தில் ஆசிரியர்கள் செய்ய வேண்டியது என்னென்ன தெரியுமா?

மூன்றாம் பருவம். 2020

1. பயோமெட்ரிக் புதிய செயலி பதிவிறக்கம் செய்தல்.

2. ஆசிரியர் மாணவர் வருகையை காலை 10.00 மணிக்குள் பதிவிடல்

3. CCE இரண்டாம் பருவ மதிப்பெண்களை பதிவேற்றம் செய்தல்

4. CCE Co-scholastic முதல் மற்றும் இரண்டாம் பருவம் பதிவேற்றம்

5. மூன்றாம் பருவ பாடநூல்கள் பாடஏடுகள் வழங்கப்பட்ட விவரங்கள் கையொப்பத்துடன் பதிவேட்டில் பதிவு செய்தல்

6. MASTER TIME TABLE & வாரவாரி காலஅட்டவணை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

7. ஐந்தாம் வகுப்பு &  எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் தமிழ் & ஆங்கிலத்தில் சரிபார்த்து இறுதி பட்டியல் தயாரித்தல்.

8. கடந்த ஆண்டு பயின்ற ஏழாம் வகுப்பு மாணவர்களின் SLAS TEST முடிவுகளை மாணவர்கள் வாரியாக EMIS SITE இல் இருந்து பதிவிறக்கம் செய்து தேவையான பின்னூட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.

9. 3,4,5 வகுப்பு மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும். செலவு தொகையை SSA திட்ட நிதியில் ஈடு செய்து கொள்ளவும். போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கிய விபரங்களை பள்ளி வாரியாக புகைப்படங்களுடன் வட்டாரக் கல்வி அலுவலத்தில் தரவேண்டும்.

10. 6,7,8 வகுப்பு ஆங்கில ஆசிரியர்களை SPOKEN ENGLISH பயிற்சி வகுப்புகளுக்கு தவறாமல் அனுப்பவும்.

11. NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை அனுப்பவும்.

12. பொங்கல் விழாவிற்காக ஆயத்தப் பணிகளை செய்தல்.

13. SMC குழு உறுப்பினர்கள் 6 பேரை பயிற்சி வகுப்புகளில் பங்கெடுக்கச் செய்தல்.

14. Pindics அனைத்து ஆசிரியர்கள் முடித்ததை தலைமை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து பதிவேற்றம் நிறைவு செய்ய வேண்டும்.

15. சாலாசித்தி பள்ளி சார் அகமதிப்பீடு பணிகளை பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.

16. வாரவாரியான பாடத்திட்டங்களை முடித்தல் வேண்டும்.

17. மாணவர்கள் கற்றல் விளைவுகள் வெளிப்பட உதவும் வகையில் அதிகளவு QR CODE பயன்படுத்துதல் வேண்டும்.

18. ஆசிரியர்கள் தங்கள் user ID மூலம் TNTP செயல்களை வகுப்பறையில் பயன்படுத்துதல் வேண்டும்.

19. இரண்டாம் பருவ மதிப்பெண்களை திரள்பதிவேட்டில் பதிவு செய்தல்...

20. இந்த ஆண்டு வருமானவரி கணக்கீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.