t> கல்விச்சுடர் தஞ்சை: வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவன் மருத்துவமனையில் அனுமதி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 January 2020

தஞ்சை: வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவன் மருத்துவமனையில் அனுமதி


 ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பிளஸ்-1 மாணவனை பாம்பு கடித்ததில் மாணவன் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 தஞ்சாவூர்  மாவட்டம் ஒரத்தநாட்டில் ஒரத்தநாடு -  மன்னார்குடி சாலையில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை ஒரத்தநாடு அருகே உள்ள தலையாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் கலைக்கோவன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்,  அப்போது அந்த பகுதியில் இருந்த பாம்பு ஒன்று கலைக்கோவனை கடித்ததாக கூறப்படுகிறது.  
 இதனால் மயக்கமுற்ற மாணவன் கலைக்கோவனை  உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு  மாணவன் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். .பள்ளி வளாகத்தில் மாணவனை பாம்பு கடித்த தகவல் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source: Dinamani

JOIN KALVICHUDAR CHANNEL