. -->

Now Online

FLASH NEWS


Sunday 12 January 2020

ஆசிரியருக்கு மரியாதை தந்த ஒரு ஆட்சியாளர்...



1994 ம் வருடம்..
அன்றைய இந்திய ஜனாதிபதி சங்கர் தயாள் ஷர்மா அரசு முறை பயணமாக ஒமான் சென்றார்.. மஸ்கட் விமான நிலையத்தில் சங்கர் தயாள் சர்மா சென்ற விமானம் தரையிறங்கிய போது நடைபெற்ற சம்பவங்கள் ஒமான் பத்திரிக்கையாளர்களுக்கு வியப்பை தந்தது..

** எந்த வெளிநாட்டு பிரதிநிதிகளையும் வரவேற்க விமான நிலையம் வருகை தராத ஒமான் சுல்தான் நேரடியாக விமான நிலையம் வந்திருந்தார்...
** விமானம் தரையிறங்கிய உடன் விமானத்துக்குள்ளேயே சென்று சங்கர் தயாள் சர்மாவை இருக்கையிலேயே வரவேற்று அழைத்து வந்தார்..
** இந்திய ஜனாதிபதியை அழைத்து செல்ல வந்திருந்த சொகுசு காரின் ஓட்டுநரை விலக்கி விட்டு தானே சங்கர் தயாள் சர்மாவுக்காக காரை ஓட்டினார் ஒமான் சுல்தான்..

ஒமான் பாதுகாப்பு துறையினரின் மூன்று புரோட்டாகால் நடவடிக்கைகளை சுல்தான் மீறியுள்ளதை சுட்டிக்காட்டிய போது தனது இளமைக்காலத்தில் இந்தியாவில் புனே பல்கலைகழகத்தில் படித்ததாகவும் அங்கு சங்கர் தயாள் சர்மா தனக்கு ஆசிரியராக பணியாற்றியதாகவும் கூறிய ஒமான் சுல்தான், எனது ஆசிரியருக்கு செய்யும் மரியாதை இது என்றும் கூறி ஆச்சரியப்பட வைத்தார்..

நேற்று மரணமடைந்த ஓமான் நாட்டு மன்னர் காபூஸ் பின் சயீத் அல் சயீத் ஒரு அழகிய முன்மாதிரி ஆட்சியாளர்...