. -->

Now Online

FLASH NEWS


Sunday 5 January 2020

ஆங்கிலத்தில் அசத்தும் அரசுப் பள்ளி குழந்தைகள்

    நீலகிரி மலை மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட குண்டாடா அரசு நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் ஆங்கிலத்தில் அருமையாக பேசி அசத்துகின்றனர். இதற்கு காரணம் இப்பள்ளியில்  அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் ஆங்கில பட்டதாரி ஆசிரியை திருமதி மல்லிகாகுமார்தான். 

ஆங்கிலபயற்சியுடன் யோகா,இசை,வாசிப்பு, ஓவியம், கட்டுரை, பேச்சு, தேசிய திறன் தேர்வு, விளையாட்டு, தடகளம்,செஸ்,கேரம்,கலை இலக்கியப் போட்டிகள்,மரம் நடுதல், அறிவியல் கண்காட்சி, என அனைத்து துறைகளிலும் குழந்தைகளை ஊக்குவித்து வட்டார மாவட்ட அளவில் வெற்றி பெற செய்து கொண்டிருக்கிறார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 10 குழந்தைகளுடன் மூடும் நிலையில் உள்ள பள்ளியை தனது இடைவிடாத முயற்சியால் மாணவர் எண்ணிக்கையை சுமார் 70 ஆக உயர்த்தினார். தற்போது 48. நீலகிரியில் தமிழக அரசின் திட்டமான அரசு பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியோடு ஆங்கில வழிக் கல்வி திட்டத்தை முதன்முதலாக கொண்டு வந்து ஏழை கிராமப்புற பெற்றோர்களின் ஆங்கில கல்வி கனவை நனவாக்கி, அவர்களின் பொருளாதார சுமையை வெகுவாக குறைத்துள்ளார். சுற்றுவட்டார 500 குடும்பங்களின் செல்லப்பிள்ளையாக, நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா பள்ளியை பார்வையிட்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடி, ஆசிரியை மல்லிகாகுமாரை பாராட்டி சென்றார்.


 இவரின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் பக்கபலமாக இருந்து வழிகாட்டி வருகிறார். தினமலர் இலட்சிய ஆசிரியர் விருது,ஜே.சி.ஐ.சிறந்த தொண்டு விருது மற்றும் சிறந்த ஆசிரியர் விருது, கல்வித் துறையின் சிகரம் தொட்ட ஆசிரியர் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.