. -->

Now Online

FLASH NEWS


Saturday 1 February 2020

பட்ஜெட் 2020ன் முக்கிய அம்சங்கள் என்னென்ன?


ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தம்

*ஜிஎஸ்டி வரி வசூலுக்கு தடையாக இருந்த அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன

*வீட்டு வசதி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது

*ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால், குடும்ப வருமானத்தில் 4% சேமிப்பாக மாறியுள்ளது

*கடந்த நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் புதிதாக 16 லட்சம் பேர் இணைந்துள்ளனர்


மூன்று முக்கிய அம்சங்கள்:
 1. இந்தியாவின் விருப்பம்,
 2. பொருளாதார வளர்ச்சி 
3. அக்கறையுள்ள சமூகம்: நிர்மலா சீதாராமன் உரை.


விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் கடன்

விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் கடன் 
வழங்கப்படும் என்றும், 20 லட்சம் சூரிய ஒளி பம்செட்டுகள் அமைக்க நிதியயுதவி வழங்கப்படும் என்றும், விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல விமான போக்குவரத்து வசதி மற்றும் பால், காய்கறிகளை கொண்டு செல்ல தனி ரயில்கள் இயக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.99,300 கோடி ஒதுக்கீடு.

மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.99,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும், பட்டப்படிப்பு அளவிலான ஆன்லைன் ப்ரோக்ராம் அறிமுகம் செய்யப்படும். 150 பல்கலைக்கழகங்களில் புதிய பாடப்பிரிவுகள் அமலுக்கு வரும், முன்னணி பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று பட்டம் வழங்கும் முறை அமல்படுத்தப்படும்.

தனியார் அமைப்புகளுடன் இணைந்து 2,000 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கிராமப்புற மேம்பாட்டிற்கு ரூ.1.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்.

பட்ஜெட் - SAT தேர்வு அறிமுகம்
*கல்வித்துறைக்கு ரூ.99,300 கோடி நிதி ஒதுக்கீடு 
*பெரிய மருத்துவமனைகளிலும் முதுகலை மருத்துவ கல்வியை வழங்க அனுமதி  
*உ.பி.யில்  தேசிய போலீஸ் பல்கலை.,  
*திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.3000 கோடி ஒதுக்கீடு
*ஆசிய மற்றும் ஆப்ரிக்க மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில SAT தேர்வு அறிமுகம் செய்யப்படும்.

சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் விரைவில் அறிமுகம்- நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023க்குள் முடிக்கப்படும்- நிர்மலா சீதாராமன்.

 'பாரத் நெட்' இணையதள இணைப்புத் திட்டத்திற்கு ரூ.6,000 கோடி செலவிடப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கண்ணாடி இழை தொடர்புகள் மூலம் ஒரு லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும். மின் பயனர்களுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர் வழங்கப்படும். நாடு முழுக்க டேட்டா சென்டர் பார்க்களை உருவாக்க தனியார் துறைக்கு ஊக்கமளிக்கும்.

பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் திட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது, பள்ளிகளில் சேரும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை, ஆண் குழந்தைகள் எண்ணிக்கையைவிட அதிகம்- நிர்மலா சீதாராமன்

நாட்டின் கஜானாவுக்கு பங்களிப்பு தருவோர் மதிக்கப்பட வேண்டும், வரி செலுத்துவோர் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது - நிர்மலா சீதாராமன்

வங்கிகளில் டெபாசிட்தாரர்களின் பணம் பாதுகாக்கப்படும். வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்வோம். டெபாசிட்களுக்கான காப்பீடு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.எல்ஐசியில் தனக்குள் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்கி திவாலானால், ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்க டெபாசிட்தாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வர்த்தக ரீதியில் செயல்படும் வங்கிகளை அரசு கவனித்து வருகிறது. மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கியின் பங்குகள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள் மூலம் மத்திய அரசுக்கு நிதி திரட்டப்படும். எல்.ஐ.சி.யில் அரசு வசம் உள்ள பங்குகள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும். 15-வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் எல்.ஐ.சியில் மத்திய அரசின் வசம் உள்ள பங்குகள் விற்கப்படும்.

NEWS WILL BE UPDATED