. -->

Now Online

FLASH NEWS


Thursday 6 February 2020

மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 100% உயர்வு

தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் கல்வியை தொடர விரும்பாத மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் 100 சதவீதமாக அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இதுதொடர்பாக தகவலை, நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளது. ராஜஸ்தான், மராட்டிய மற்றும் கர்நாடக மாநிலங்களில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ள நிலையில், கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழகத்தில், 9 மற்றும் 10ம் வகுப்புகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்துள்ளது. கடந்த 2015-2016ம் கல்வியாண்டில் 8 சதவீதமாக இருந்த மாணவர்களின் இடைநிற்றல், தற்போது 2017-2018ம் கல்வியாண்டில் 16.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 அதாவது, கடந்த 3 ஆண்டுகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை தொடர விரும்பாமல் பாதியிலேயே வெளியேறிய மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது. 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சியை காட்டுவதற்காக மாணவர்களை அதிகம் படிக்குமாறு நிர்பந்திக்கப்படுவதால் தான், இந்த இடைநிற்றல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக சமச்சீர் திட்ட அதிகாரிகள் சிலரை தொடர்பு கொண்டபோது அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.