. -->

Now Online

FLASH NEWS


Sunday 2 February 2020

B.E, M.A, M.sc படித்தவர்களுக்கு அரசு பாலிடெக்னிக்களில் 1060 விரிவுரையாளர் பணிகள்!

Source Vikatan


தமிழ்நாடு அரசின் கல்விச் சேவைகளில் (Tamil Nadu Educational Service) இடம்பெற்றிருக்கும் அரசு பாலிடெக்னிக் நிறுவனங்கள், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத சிறப்பு நிறுவனங்களில் (Special Institutions (Engineering / Non Engineering)) காலியாக இருக்கும் 1060 விரிவுரையாளர் (Lecturer) பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்:

பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில்

கட்டுமானப் பொறியியல் - 112,

இயந்திரவியல் பொறியியல் - 219,

மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் - 91,

கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் - 3,

கணினிப் பொறியியல் - 135,

தகவல் தொழில்நுட்பம் - 6,

உற்பத்திப் பொறியியல் (Production Engineering) - 6,

நெசவுத் தொழில்நுட்பம் - 3,

அச்சுத் தொழில்நுட்பம் - 6 என்று மொத்தம் 700 விரிவுரையாளர் பணியிடங்களும், பொறியியல் அல்லாத பிரிவுகளில்

ஆங்கிலம் - 88,

கணிதம் - 88,

இயற்பியல் - 83,

வேதியியல் - 84,

நவீன அலுவலகப் பயிற்சி (Modern Office Practice) - 17 என்று மொத்தம் 360 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 15 பாடப்பிரிவுகளிலும் இருக்கும் 1060 இடங்களில் பாடம், இன வாரியாக இட ஒதுக்கீடு குறித்த தகவல்கள், தகவல் குறிப்பேட்டில் அட்டவணையாகத் தரப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

1. பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளிலான இடங்களுக்கு, தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன், இளநிலைப் பட்டம் (BE/B.Tech) பெற்றிருக்க வேண்டும். தொடர்புடையப் பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் (M.E/M.Tech) பட்டம் பெற்றிருப்பவர்களாக இருப்பின், இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் என்று ஏதாவதொன்றில் 60% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்கலாம்.

2. பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளுக்கான இடங்களுக்கு, தொடர்புடைய பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் (M.A/M.Sc) பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 12-2-2020

வயது வரம்பு:

இந்தப் பணியிடத்துக்கு மேலதிக வயது 58 என்பதால், விண்ணப்பதாரர்கள் 1-7-2019 அன்று 57 வயது நிறைவடைந்திருக்கக் கூடாது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in எனும் இணையதளத்தில் பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமாக ரூபாய் 600, எஸ்சி. எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூபாய் 300 இணைய வழியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 12-2-2020

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 12-2-2020

தேர்வுமுறை:

விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் மூன்று மணி நேர கணினி வழித் தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் நாள், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தரவிறக்கம் செய்துகொள்ளும் நாள் போன்றவை பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வில் விண்ணப்பிக்கும் பாடப்பிரிவுக்கான முதன்மைப் பாடத்தில் 1 மதிப்பெண் கேள்விகள் - 100 (1x100=100),

2 மதிப்பெண் கேள்விகள் - 40 (2x40=80),

பொது அறிவு தொடர்புடைய 1 மதிப்பெண் கேள்விகள் - 10 (1x10=10)

என்று மொத்தம் 190 மதிப்பெண்களுக்கான 150 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் (Teachers Recruitment Board) இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வுக்குப் பின்பு, இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களிலிருந்து குறுகிய பட்டியல் (Shortlisted) தயாரிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, பணி அனுபவம் - 2 மதிப்பெண்கள், கூடுதல் கல்வித்தகுதி - 3 மதிப்பெண்கள், முனைவர் பட்டம் (Ph.D) பெற்றிருந்தால் - 5 மதிப்பெண்கள் என்று சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பின்னர், தேர்வில்பெற்ற மதிப்பெண்கள், சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு கூடுதல் மதிப்பெண் பெற்றவர்கள், பணிக்குத் தகுதியாகத் தேர்வுசெய்யப்படுவர். தேர்வானவர்களுக்கு 22-ம் நிலையிலான (Level 22) ரூபாய் 56100 - 177500 எனும் ஏற்ற முறையில் (Scale of Pay) சம்பளம் வழங்கப்படும்.

கூடுதல் தகவல்கள்:

தேர்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in எனும் இணையதளத்தினைப் பார்வையிடலாம். அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உதவி தொலைபேசி 044 - 28272455, 7373008144, 7373008134 எனும் எண்களில், அலுவலக வேலை நேரத்தில் தொடர்புகொண்டு பெறலாம்.