t> கல்விச்சுடர் அலுவலக ஊழியர்களுக்கு ஆசிரியர் வேலை விதிகளில் திருத்தம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 February 2020

அலுவலக ஊழியர்களுக்கு ஆசிரியர் வேலை விதிகளில் திருத்தம்



 'பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் ஆசிரியர் வேலை வழங்கப்படும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான கல்வித் தகுதி, நியமன விதிகள் குறித்த திருத்த சட்டம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், அரசு பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான, மொத்த காலியிடங்களில், 2 சதவீதத்தை, கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களான, அமைச்சு பணியாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவரை, பிளஸ் 2 முடித்து, தொடக்க கல்வி டிப்ளமா படித்திருந்தால், அவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், இனி வரும் காலங்களில், தொடக்க கல்வி டிப்ளமா படிப்புடன், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL