t> கல்விச்சுடர் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 March 2020

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 


சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி கோரிய நிலையில், ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என முதல்வர் பதில் தெரிவித்துள்ளார்.



ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்.

மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெற இருந்த பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது

 CORONOவைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவிப்பு,

பொதுமக்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஆணை.




11, 12 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இந்த ஆண்டு தேர்வு ரத்து குறித்தும் ஆலோசித்து  முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 



JOIN KALVICHUDAR CHANNEL