t> கல்விச்சுடர் தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் மாற்றம்: தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 March 2020

தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் மாற்றம்: தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி

காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் திடீரென மாற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகம் முழுவதும் கடந்த 2 ம் தேதி 12 ம் வகுப்பு பொது தேர்வு துவங்கியது. காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி மையத்தில், அந்த பள்ளி மற்றும் ஒரு தனியார் பள்ளியை சேர்ந்த சுமார் 450 மாணவர்கள் தேர்வு எழுதகின்றனர். இதில் முதன்மை தேர்வு கண்காணிப்பாளராக மோகன்தாஸ் நியமிக்கப்பட்டார்.தேர்வு துவங்கிய நாளில் இருந்தே தேர்வு எழுதும் மாணவர்கள் சரியான முறையில் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த நிலையில் பள்ளியில் உள்ள ஒரு சில ஆசிரியர்கள் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவ அணுகியுள்ளனர்.

இதனை ஏற்காத மோகன்தாஸ் தேர்வு நேரத்தில் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.அப்பகுதியினர் சிலர் கண்காணிப்பு அலுவலரை மிரட்டும் தொணியில் பேசியுள்ளனர்.மேலும் இது குறித்து அரசியல் அழுத்தம் கொடுத்து கடலுார் சி.இ.ஓ., விடம் புகார் தெரிவித்தாக தெரிகிறது. அதனை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் திடீரென மோகன்தாஸ் காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளிக்கு மாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து முதன்மை கல்வி அதிகாரியிடம் கேட்டபோது, புகார் கொடுக்க கேட்டுள்ளேன், விசாரணைக்கு பின் தான் எதுவும் சொல்ல முடியும் என்றார். நேர்மையாக பணியாற்றிய அலுவலரை இதுபோல் பந்தாடுவது நியாயமா என தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

JOIN KALVICHUDAR CHANNEL