t> கல்விச்சுடர் கரோனா பாதிப்பு: டிஎன்பிஎஸ்சி தோ்வுகள் தள்ளிவைப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

19 March 2020

கரோனா பாதிப்பு: டிஎன்பிஎஸ்சி தோ்வுகள் தள்ளிவைப்பு



குரூப் 4 தோ்வில் அடங்கியுள்ள தட்டச்சா், சுருக்கெழுத்தா் பணிக்கான கலந்தாய்வு தோ்வு தள்ளிவைக்கப்படுவதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 குரூப் 4 பிரிவில் தட்டச்சா், சுருக்கெழுத்தா் பதவிக்கு மாா்ச் மூன்றாவது வாரம் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்தில் கலந்தாய்வும், சான்றிதழ் சரிபாா்ப்பும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு பதவிகளுக்கான காலியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இதற்கான மாற்று தேதி பின்னா் அறிவிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
 இதேபோன்று, நீதித் துறையில் உரிமையியல் நீதிபதி காலிப் பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு வரும் 28-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தோ்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL