. -->

Now Online

FLASH NEWS


Saturday 21 March 2020

கல்லூரி மற்றும் சிபிஎஸ்சி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும்: மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்


கல்லூரி மற்றும் சிபிஎஸ்சி ஆசிரியர்கள் இம்மாத இறுதி வரை வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.








சீனாவில் வூஹான் மாகாணத்தில் கடந்த வருடம் டிசம்பரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 298 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இதுவரை 5 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து மத்திய அரசு ஏற்கனேவே உத்தரவிட்டிருந்தது.

ஆனால் ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கல்லூரி மற்றும் சிபிஎஸ்சி ஆசிரியர்கள் இம்மாத இறுதி வரை வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை மாலை வெளியிட்ட சுற்றறிக்கையில், 'அந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து தன்னாட்சி அமைப்புகள், கல்லூரி கள் மற்றும் சிபிஎஸ்சி உள்ளிட்ட வாரியங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.