. -->

Now Online

FLASH NEWS


Friday 27 March 2020

வீட்டில் போர் அடிக்கிறதா? – நாளை முதல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகவிருக்கிறது ராமாயணம்!


மக்கள் ஊரடங்கு காரணமாக வீட்டில் என்னசெய்வதென்று தெரியாமல் இருப்பவர்களுக்காக நாளை முதல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதனால், பொதுமக்கள் யாவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதால், மாணவர்களும் வீட்டிலிருந்தபடியே பொழுதை கழிக்கின்றனர்.

பலர் இவ்வாறு வீட்டிற்குள் இருப்பதால் அதிக நேரம் தொலைக்காட்சி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என அவற்றை பயன்படுத்துவதில் நேரம் செலவிடுகின்றனர். இன்னும் சிலரோ, பாரம்பரிய விளையாட்டுக்களை வீட்டில் உள்ள குழந்தைகளுடன் விளையாடுகின்றனர்.

இந்த நிலையில், வீட்டிலிருப்பவர்களுக்காக மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, நாளை முதல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் ஒளிபரப்பப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். காலை 9 மணி முதல் 10 மணி வரையும், பின்னர் இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் ராமாயணம் ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.