. -->

Now Online

FLASH NEWS


Friday 13 March 2020

பள்ளி செல்லா குழந்தைகளுக்கு இனியதோர் கல்வி சுற்றுலா!


சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளி செல்லா குழந்தைகள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மூலம், இடைநிற்றலை தவிர்க்கும் வகையில், கல்வியாண்டின் விடுமுறையில் பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இவ்வாறு கண்டறியப்படும் குழந்தைகளுக்கு, அந்தந்த வட்டாரத்தில், ஒரு குறிப்பிட்ட பள்ளியை மையாக வைத்து, அங்கு சேர்க்கப்படுகின்றனர்.குடிமங்கலம் ஒன்றியத்தில், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தான், பள்ளி செல்லா குழந்தைகள் மையமாக உள்ளது. நடப்பாண்டில், பள்ளி செல்லா குழந்தைகள் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல, ஒரு மையத்துக்கு, 4,500 ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், பெதப்பம்பட்டி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து, பத்து பள்ளி செல்லாக் குழந்தைகள் ஆழியாருக்கு சுற்றுலா அழைத்துசெல்லப்பட்டனர்.பள்ளி தலைமையாசிரியர் கோப்பெருந்தேவி, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை வழிநடத்தினர். ஆழியார் அணை, மற்றும் தென்னை ஆராய்ச்சி நிலையங்களுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.