. -->

Now Online

FLASH NEWS


Wednesday 1 April 2020

சிபிஎஸ்இ-யில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: 9 மற்றும் 11-ம் வகுப்பு தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யும்...மத்திய அரசு அறிவிப்பு



சிபிஎஸ்இ-யில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை அந்தந்த சிபிஎஸ்இ பள்ளிகளே முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43000-த்தை தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 8,72,792 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,43,271 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,84,526 பேர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் பார்த்தால் இத்தாலி , ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நேற்று உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிலும் தொடர்ந்து பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1637-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் தமிழகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிபிஎஸ்இ 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை, மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுகிறார்கள்.

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் மற்ற தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி செய்யப்படுவார்கள். 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகம், புதுச்சேரி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள், மாநில பாடத்திட்டத்தில் பயிலும் (1 முதல் 9 ஆம் வகுப்பு வரை) மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவித்த நிலையில் சிபிஎஸ்இ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.