. -->
.PLEASE WAIT 3 SECONDS..
.AFTER APPEARING ARROW AND TOUCH THAT..

Now Online

Friday, 15 May 2020

தேர்வின்றித் தேர்ச்சி சாத்தியமா? 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும்... சில கடந்தகால சம்பவங்களும்ஆண்டுதோறும் மே மாதம் என்பது தேர்வு பள்ளி மாணவர்கள் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் காலம். ஆனால், தேர்வே நடக்குமா என்ற சந்தேகத்தில் காத்திருக்க வைத்திருக்கிறது கொரோனாப் பேரிடர்.

பொதுத்தேர்வுகளை நடத்தியே தீருவோம் என்றும் மாநில அரசும், அப்படி நடத்தியே ஆக வேண்டிய கட்டாயம் என்ன என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், இந்த ஆண்டு பொதுத்தேர்வை நடத்த வேண்டாம் என்றும் பள்ளித் தேர்வுகளின் போது எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி செய்ய வேண்டும் என்றும் வசந்தி தேவி, பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்ற தமிழகத்தின் அறியப்பட்ட கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். 

ஒரு கொள்ளை நோய் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. குணப்படுத்தும் மருந்தோ அல்லது தடுப்பு மருந்தோ ஏதும் இல்லாத சூழலில் இனிமேல் இந்த நோயோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்ற இடத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது உலகம். இந்த வாசகத்தை அடிநாதமாகக் கொண்டுதான் மெல்ல மெல்ல நாட்டின் செயல்பாடுகளை இயல்புக்குத் திருப்பி வருகின்றனர் ஆட்சியாளர்கள். 

ஆனால், கூட்டம் கூடக் கூடாது, பொதுப்போக்குவரத்தில் கவனம் தேவை, முகக்கவச வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் இருக்கின்றன. இப்படியிருக்கும் நிலையில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுதும் தேர்வு என்பதை நினைத்தாலே இந்தத் தேர்வு நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், வலுவான காரணங்கள் ஏதும் சொல்லாமல், 10ஆம் வகுப்புத் தேர்வு முக்கியமானது என்று மட்டும் சொல்லிக்கொண்டிருக்கும் மாநில அரசு, தேர்வை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையன்நோயோடு வாழப்பழகுவது என்றால் எல்லோருக்கும் நோயை வரவழைத்துக் கொண்டு வாழ்வது என்று பொருளல்ல. குறைந்தபட்சம் மேலாண்மை செய்யக்கூடிய அளவிற்காவது இந்தநோய்க்கான மருத்துவ வசதிகள் கண்டுப்பிடிக்கப்படட்டும். அதன்பிறகு இதுபோன்ற பரீட்சார்த்த நடவடிக்கைகள் எடுக்கலாம். அதுவரை 10ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படக் கூடாது என்பதே பெரும்பாலானோரின் கோரிக்கை. 

அப்படியென்றால், இதற்கு முன்பு எப்போதாவது 10ஆம் வகுப்புத் தேர்வு நடத்தப்படாமல் இருந்துள்ளதா? அல்லது மாணவர்கள் தேர்வெழுதாமல் தேர்ச்சி செய்யப்பட்டதுண்டா? ஆம். இங்கு ஒரு சம்வபத்தை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். 2008 ஆம் ஆண்டு அது. சென்னை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் வேலூரில் உள்ள ஒரு பள்ளியில் திருத்தப்பட்டு வந்தது. எதிர்பாராத விதமாக இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் ஏறக்குறைய 30 ஆயிரம் விடைத்தாள்கள் எரிந்து நாசமாயின. கோப்புப்படம்இந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வி வைக்கப்படுமா? இல்லையா? என்று கேள்விகள் எழும்பிய நிலையில், அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “அரசுத் தேர்வுத்துறையின் ‘வழக்கமான’ நடைமுறைகளைக் கொண்டு சரிசெய்யப்படும்” என்று தெரிவித்தார். அந்த ஆண்டு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு வைக்கப்படவில்லை. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் சராசரி மதிப்பெண் வழங்கப்பட்டது.

 அதேபோல, 2013ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் காணாமல் போயின. அப்போதும் கூட இதே ( 2008 நிகழ்வு ) நிகழ்வை முன்னுதாரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. இதுகுறித்து அரசு அறிவித்ததாவது, “பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தினால், அது, மாணவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை கருத்தில்கொண்டு, 221 மாணவர்களுக்கும், அவர்களது ஆங்கிலம் இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்களே, முதல் தாளுக்கும் வழங்கப்படும். ஆங்கிலம் இரண்டாம் தாளில் தோல்வி அடைந்திருந்தால், அவர்களுக்கு, ஆங்கில பாடத்தில், குறைந்தபட்ச தேர்ச்சி சதவீதத்தை அளித்து, ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அப்போதைய (2013) பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த வைகைக் செல்வன் இதனை “மாணவர்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு”என்று தெரிவித்தார். வைகைச் செல்வன்விழுப்புரத்தில் ஆங்கிலம் முதல் தாள் என்றால், விருத்தாசலத்தில் தமிழ் இரண்டம் தாளைத் தண்டவாளத்தில் இருந்து தவறவிட்டுவிட்டு இதே பாணியில் சரி செய்த சம்பவமும் நடைபெற்றுள்ளது. அதே 2013ஆம் ஆண்டு. ரயில் பெட்டி சரியாக பூட்டப்படாததால் ரயில் தண்டவாளத்தில் விழுந்து நாசமானது தமிழ் இரண்டாம் தாள் கட்டு, வெளியில் தெரிந்தால் பிரச்சினை என்பதால் தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த விடைத்தாள்களைச் சேகரித்து, மீதமிருந்த சில விடைத்தாள்களையும் சேர்த்து தீ வைத்துக் கொளுத்தியது தனிக்கதை. இந்த சம்பவத்திலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மறு தேர்வு கிடையாது என்றும், தமிழ் முதற்தாளில் என்ன மதிப்பெண் பெறுகின்றனரோ, அதே மதிப்பெண், இரண்டாம் தாளுக்கு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இவற்றில் ஒன்றை கவனிக்க வேண்டியது அவசியம். அரசு நினைத்தால் இந்த முடிவு சாத்தியம். ஆனால், அரசின் அவசியமற்ற பிடிவாதமே தற்போது இந்த பொதுத்தேர்வுகளை நடத்தியே தீருவது என்ற முடிவுக்கு தள்ளியிருக்கிறது. இதன் விளைவாக, 10ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்தாமல் விடுவதை, “அரசின் இயலாமை என்றோ/ அல்லது கொரோனா தீவிரம் இயல்புக்கு வராது என்று அரசே ஒப்புக்கொள்வதாகவோ அமையும் என்றோ நினைக்கிறதா மாநில அரசு?”என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. 

பத்தாம் வகுப்பு தேர்வு யாருக்கு? மாணவர்களுக்கா, அரசுக்கா?மேலும், மேற்கண்ட நிகழ்வுகளில் எல்லாம், தவறு நிர்வாகத்தின் பக்கம் இருக்கிறது. அதனால்தான், மாணவர்களின் நலன் இரண்டாம் பட்சத்திலும் தன் தரப்பை நியாயப்படுத்த சலுகை வழங்கும் எண்ணம் முதன்மையாகவும் இருந்திருக்கிறது என்ற விமர்சனமும் இதன்மூலம் எழுந்துள்ளது. எது எப்படியானாலும், கொரோனா விவகாரம் குழந்தைகளின் உயிர் தொடர்பானது. மாநில அரசால் இன்னும் நோயின் தீவிரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையில், தேர்வுகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவ்வளவு அவசியமல்ல என்றும் பெற்றோர்களும் ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போதைய சூழலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு தொடர்பான முடிவுகளை அரசு மாற்றியமைக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் வேண்டுகோள்.

Source: Samayam

CLICK PHOTO TO JOIN

CLICK PHOTO TO JOIN