t> கல்விச்சுடர் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 % குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 May 2020

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 % குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்



கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக  அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தொழில்துறைகள் முடக்கம் காரணமாக மத்திய மநில அரசுகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.இந்த நிலையில், வருவாய் இழப்பு காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 % குறைக்கப்பட இருப்பதாக  சில ஊடகங்களில் செய்தி வெளியானதாக கூறப்படுகிறது. 

ஆனால், இந்தத்  தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய அரசு,  மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது. 

JOIN KALVICHUDAR CHANNEL