. -->

Now Online

FLASH NEWS


Friday 22 May 2020

ஆகஸ்ட் 31 வரை வங்கிக் கடன் இ.எம்.ஐ செலுத்தத் தேவையில்லை" - ரிசர்வ் வங்கி!


கொரோனாவுக்கு முன்பிருந்தே இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. கொரோனாவுக்குப் பிறகு பூமியை துளைத்துக் கொண்டு, அதலபாதாளத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ரிசர்வ் வங்கி அதன் பங்குக்கு ரெப்போ வட்டி விகிதங்களைக் குறைத்து, பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
கடந்த 3 நாள்களாக உலகப் பொருளாதாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வந்தோம். 

ரிசர்வ் வங்கியின் பணிகள் தொய்வடையாமல் இருக்க 200 அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்"- சக்திகாந்த தாஸ் நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன், கடந்த மார்ச் 27-ம் தேதி 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா பேக்கேஜ்களை அறிவித்த, அடுத்த நாளில் ரிசர்வ் வங்கியின்  கவர்னர் சக்திகாந்த தாஸ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மக்களுக்கு சில சலுகைகளை வழங்கினார். அதேபோல இந்த முறையும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், இன்று காலை அவர் மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
``கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்துக்கு முக்கியப் பங்களிக்கும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படுவது வருத்தமளிக்கிறது. இனிவரும் காலங்களில் உலகப் பொருளாதாரம் 13 முதல் 32 சதவிகிதம் வரையிலான அளவுக்குச் சுருங்கக்கூடும். மானாவாரி சாகுபடியின் பரப்பளவு 44 சதவிகிதம் உயர்ந்துள்ளது.  தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 சதவிகிதம் குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயரலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.  உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியைச் சந்திக்கும். மத்திய அரசின் வரிவசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது" என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். 
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்vikatanமுக்கிய மூன்று அறிவிப்புகள்! 
* ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 4.4 சதவிகிதத்திலிருந்த ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக குறைகிறது. இதன் மூலம் வீட்டுக்கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* ஏற்றுமதி நிறுவனங்களுக்குக் கடன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன் வழங்க உடனடியாக 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* கடன்களுக்கான மாதத்தவணைகளைச் செலுத்த மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதங்கள் அவகாசம் அளித்திருந்தநிலையில், அடுத்த முன்று மாதங்களுக்கு இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கும் வங்கிக் கடனுக்கான இ.எம்.ஐ தொகையை மக்கள் செலுத்தத் தேவையில்லை.