t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 June 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,940 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய இன்றைய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,940 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 3,761 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டவர்கள் 179 பேர்.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,992 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 54 பேர் (தனியார் மருத்துவமனை -10, அரசு மருத்துவமனை -44) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,079 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மேலும் 1,443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 45,537 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட 35,656 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் 32,948 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 11,10,402 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு ஆய்வகங்கள் 47, தனியார் ஆய்வகங்கள் 43 என மொத்தம் 90 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

JOIN KALVICHUDAR CHANNEL