| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
20 June 2021
EMIS STUDENTS PROMOTE ISSUES
16 June 2021
15 June 2021
தலைமை ஆசிரியர்களுக்கான முக்கிய தகவல்
12 June 2021
8 March 2021
TN -EMIS NEW UPDATE AVAILABLE NOW DIRECT LINK ATTACHED
25 February 2021
EMIS Latest News - இயக்குநர் செயல்முறைகள்
13 January 2021
9 January 2021
EMISல் பதிவேற்றம் செய்ய பள்ளி மேலாண்மைக்குழு மாதிரி செயல்திட்டம் - SMC ACTION PLAN FORMAT 2020 - PDF
3 January 2021
2 January 2021
1 January 2021
EMIS வலைதளத்தில் புதிய வசதி!
EMIS latest news
20 October 2019
10 November 2018
EMIS இணையத்தில் இன்று ( 10.11.2018) ஒருநாள் மட்டும் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு!
இவ்வாண்டு முதல் 10,11,12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நாமினல் ரோல் தயாரிக்கும் பொழுது அது சார்ந்த தகவல்கள் திரட்டப்படுவது அரசின் EMIS வலைதளம் மூலமே நடந்தன.
எனவே 10,11,12 ஆம் வகுப்பிற்கான மாணவர்கள் EDIT வசதி நிறுத்தப்பட்டு இருந்தது, ஆனால்+1 மாணவர்களின் பதிவில் பல்வேறு மாற்றங்கள் செய்யவேண்டி உள்ளதால் EMIS ல் EDIT வசதி செய்யப்படவேண்டும் என பல்வேறு பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று 10.11.2018 ஒருநாள் மட்டும் +1 மாணவர்களுக்கு மட்டும் EMIS ல் EDIT வசதி செய்யப்படஉள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் +1 மாணவர்களின் பதிவில் திருத்தங்கள் செய்து மாணவரின் தகவல்களை நிகழ்நிலைக்கு கொண்டுவர கேட்டுக்கொள்ளப்படுகிறது.
7 October 2018
EMIS - பதிவு முடியாததால் காலதாமதமாகும் ஸ்மார்ட் கார்டு திட்டம்
அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஸ்மார்ட் கார்டு திட்டம் காலதாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்தாக பள்ளி கல்வி மேலாண்மை இணையதளம்(இஎம்ஐஎஸ்) என்ற திட்டத்தை கடந்த 2012ம் ஆண்டு அரசு தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் ஒன்று முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவர்களின் பெயர், முகவரி, பள்ளி விவரம், பெற்றோர் விவரம் உள்ளிட்ட பொதுவான தகவல்கள் மற்றும் ரத்த வகை, எடை உயரம் உள்ளிட்ட விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் கூடுதலாக ஒவ்வொரு விவரமும் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டே இருக்கும். அதை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. அதற்கான பணிகள் தொடர்ந்து பல மாதங்களாக நடந்து வருகிறது. இந்த விவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் தனித்தனியாக ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் உடனுக்குடன் இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த கல்வியாண்டு தொடங்கி 3 மாதங்கள் முடிந்து தற்போது 4வது மாதம் தொடங்கியுள்ளது.
இருப்பினும் பல மாவட்டங்களில் மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்வது தொடர் காலதாமதமாவதாக புகார் எழுந்துள்ளது. அதாவது பெரும்பாலான அரசு தொடக்கப்பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் வசதியும் இல்லாமல் ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் விவரங்கள் கடந்த ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் எங்களுக்கு என்று தனியாக கணினி ஆசிரியர்கள் இல்லை. இங்கிருக்கும் ஓரிரு ஆசிரியர்களும் கணினி தெரிந்த ஆசிரியர்கள் இல்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள வேறு பள்ளி ஆசிரியர்களிடம் கொடுத்து பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மேலும் கணினி தெரிந்த ஆசிரியர்கள் இருந்தாலும் பள்ளியில் கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் வசதி இல்லை. இதனால் தனியார் இன்டர்நெட் மையத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டி உள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 90 லட்சம் மாணவர்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது 90 சதவீதமாகும். இந்த பணி நூறு சதவீதம் முடியாமல் உள்ளதால் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடர்ந்து காலதாமதமாகிறது. இந்த பணி முடிந்தவுடன், ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஸ்மார்ட் கார்டால் என்ன பயன்?
இந்த திட்டம் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையாக மட்டும் அல்லாமல் கல்வித்துறையில் டிஜிட்டல் வளர்ச்சிக்கான நகர்வாகவும் கருதப்படுகிறது. இந்த கார்டில் பயிலும் மாணவர்களின் புகைப்படம், ரத்த வகை, முகவரி, குடும்ப விவரம், ஆதார் விவரம் இடம் பெற்று இருக்கும். ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.
மேலும் ஆசிரியர்கள் குறித்த விவரம் உள்ளிட்டவை குறித்தும் அறிந்து கொள்ளலாம். பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறைக்கு தேவை இருக்காது. ஒருங்கிணைக்கப்படும் தகவல்கள் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு தீர்வு காண வழிவகை ஏற்படும்
23 September 2018
EMIS - Photo Upload - Doubts, Rectification & Clarification Tips
EMIS இணையத்தில் மாணவர்கள் போட்டோக்கள் பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளுக்கான தீர்வுகள் !!!!
சில பள்ளிகளில் நாங்கள் சரியான அளவில் ( 150 x 175 , below 25 kb ) போட்டோவை ரீசைஸ் செய்து அப்லோடு பண்ணும் போது அப்லோட் ஆகிவிட்டதாக தகவல் வருகிறது..ஆனால் பழைய போட்டோவே டிஸ்பிளே ஆகிறது என்று ஒரு இடர்பாட்டை நமக்கு கொண்டு வந்தார்கள்...இதற்கான தீர்வை விளக்கப்படங்கள் மூலம் விளக்கியுள்ளோம்...பார்த்துப் பயன் அடையவும்..








18 September 2018
12 September 2018
EMIS PHOTO UPDATION WORK எப்படி தெரியுமா?
*⭐EMIS வலைதளத்தில் மாணவர்கள் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்ய தற்பொழுது வழிவகை செய்யப்பட்டுள்ளது.
*வழிமுறைகள்:
*🔶EMIS வலைதளத்தில் Username and Password கொடுத்து open செய்துகொள்ள வேண்டும்.
*🔶Student option ல் Student list ஐ கிளிக் செய்ய வேண்டும்.
*🔶வகுப்பு வாரியாக Student strength காண்பிக்கும், முதலில் ஒன்றாம் வகுப்பினை கிளிக் செய்யவும், பின் Section ஐ கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
*🔶மாணவர்கள் பெயர் வரிசையாக காண்பிக்கும், அவற்றில் Unique I'd number ஐ கிளிக் செய்யவும்.
*🔶UPDATE STUDENT PHOTO என்று நீல நிறக் கட்டத்தில் காணப்படும் அதற்கு கீழே Choose File என்று இருக்கும் அதனை கிளிக் செய்து Photo இருக்கும் Folder ஐ கிளிக் செய்து Photo வை Select செய்து open என்ற option ஐ கிளிக் செய்தால் photo Update ஆகிவிடும்.
*(முக்கிய குறிப்பு):
*⚡இந்த வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன் மாணவர்களுடைய புகைப்படத்தினை 25KB க்கு மிகாமல் 150×175 என்ற அளவில் தனித்தனியாக எடுத்து கணினியில் ஒரு Folder ல் தயாராக வைத்திருக்க வேண்டும்.
*⭐கடைசி நேரத்தில் செய்யாமல் முன்னதாக செய்தால் Server Problem போன்ற இடர்பாடுகளில் சிக்காமல் தப்பித்துக்கொள்ளலாம்.
















