t> கல்விச்சுடர் 10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் !! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

25 December 2016

10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் !!



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுக்கு, டிச., 26 முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர்
வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் மார்ச்சில் நடக்கும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும், நேரடி தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.


இதற்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், டிச., 26 முதல், ஜன., 1 வரை, மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணமாக, 25 ரூபாய் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பம் மற்றும் கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில், அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL