t> கல்விச்சுடர் 23 நிமிட பேச்சின் போது, 5 முறை கண்ணீர் விட்டு அழுத சசிகலா.. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

31 December 2016

23 நிமிட பேச்சின் போது, 5 முறை கண்ணீர் விட்டு அழுத சசிகலா..

"மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில் நம் பயணத்தை தொடருவோம்" என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.




அ.தி.மு.க. புதிய பொதுச்செயலாளராக சசிகலாவை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்தனர். அந்த தீர்மான நகலை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தம்பித்துரை, பொன்னையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போயஸ்கார்டன் சென்று சசிகலாவிடம் வழங்கி பொறுப்பேற்க சம்மதம் கேட்டனர்.

அவர்களின் கோரிக் கையை ஏற்று பொதுச்செயலாளராக சசிகலா சம்மதம் தெரிவித்தார்.

அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வந்து 12 மணிக்கு பதவியேற்க உள்ளார். முறைப்படி பொதுச் செயலாளர் பணியினை தொடங்க உள்ள சசிகலாவை வரவேற்க தலைமையகம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

சசிகலாவை வாழ்த்தி வரவேற்கும் பேனர்கள் லாயிட்ஸ் சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியில் ஜெயலலிதாவுடன் சசிகலா இருக்கும் பிளக்ஸ் பேனர்கள் அடுக்கப்பட்டுள்ளன. சசிகலாவின் புகழ்பாடும் "தியாகத் தாயே" "சின்னம்மா வருக" போன்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் சுவரெங்கும் ஒட்டப்பட்டுள்ளன.

இதனால் இந்தப் பகுதியில் காவல்துறையின் கெடுபிடி தீவிரமடைந்துள்ளன. நேற்றிரவு முதலே போலீசார், அதிமுக தலைமை அலுவலகம் இருக்கும் பகுதியின் இரு பகுதிகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இன்று காலையில் பதவி ஏற்பு விழாவுக்காக போயஸ்கார்டனில் இருந்து சசிகலா புறப்பட்டார். ஜெயலலிதா தலைமைக் கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அதே போல் சசிகலாவை வரவேற்கவும் பிரமாண்ட மான ஏற்பாடுகள் செய்யப் பட்டு இருந்தன. தொண்டர்களின் வரவேற்பை ஏற்றபடி பகல் 12.10 மணியளவில் ராயப் பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு சசிகலா வந்தார். தலைமைக் கழக வாசலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து தலைமைக் கழகம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் சசிகலா ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தலைமை கழகத்துக்குள் சென்று கட்சியின் பொதுச்செயலாளராக முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டார்.பின்னர் பொது செயலாளருக்கு உரிய இருக்கையில் அமர்ந்து கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் தொண்டர்களிடையே உருக்கமான உரை நிகழ்த்தினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றவுடன் நிர்வாகிகள் மத்தியில் பேசிய உரை நேரடியாக கட்சியின் வளாகத்தில் 2 அகன்ற திரை மூலம் ஒளிப்பரப்பட்டது. சசிகலா தனது 23 நிமிட பேச்சின் போது, உணர்ச்சி பெருக்கால் 5 முறை கண்ணீர் விட்டு அழுதார்.

JOIN KALVICHUDAR CHANNEL