ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக பிரதமர் மோடி, நாளை (31ம் தேதி) இரவு 7.30 மணியளவில் டிவி மூலம் பேச உள்ளார்.
கட்டுப்பாடு:
கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி டிவியில் பேசினார். அப்போது கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இந்த திட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், வாபஸ் பெறப்பட்ட பணத்தை டிசம்பர் 31ம் தேதி வரை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்தார். வங்கியில் பணம் டிபாசிட் செய்யவும், எடுக்கவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து அவ்வபோது இந்த விதிகள் மாற்றப்பட்டன. இவ்வாறு 60 முறை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டு வாபசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
தளர்வு?
இந்நிலையில், பிரதமர் மோடி நாளை மறுநாள், டிசம்பர் 31ம் தேதி இரவு 7.30 மணியளவில் டிவி மூலம் பேச உள்ளார். ரூபாய் நோட்டுவாபஸ் தொடர்பாக பேச உள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளதால், பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||