t> கல்விச்சுடர் சசிகலா குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை: அதிமுக - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 December 2016

சசிகலா குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை: அதிமுக


AAA

சென்னை: சசிகலா குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக தொழில்நுட்பக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 5ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இந்நிலையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவை, அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ளும்படி அதிமுகவினர் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் சசிகலா குறித்து மீம்ஸ் உருவாக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அதிமுகவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் செயல்படுபவர்களை, அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில இணைச் செயலர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள பதிவில், அதிமுகவைப் பற்றியும், ஜெயலலிதாவின் இறப்பு குறித்தும், சசிகலா பற்றியும் தவறான, உண்மைக்கு புறம்பான கருத்துகள் மற்றும் தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும், அவ்வாறு பதிவிடுவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் சமூக வலைதளங்களில் சசிகலா குறித்து எதிர்மறையான கருத்துகள் திட்டமிட்டு பரவ விடப்படுவதாகவும், இதில் 60 சதவீதம் எதிர்க்கட்சிகளின் செயல் என்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைக் கட்டுப்படுத்தி, பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளர். 


JOIN KALVICHUDAR CHANNEL