ரயில் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடையும் நபர்களுக்கும் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் இழப்பீடு தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே துறை கூடுதல் தலைமை இயக்குநர் அனில் சக்சேனா, ரயில் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடையும் நபர்களுக்கு வழங்கப்படும் தொகை இரட்டிப்பாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த புதிய நடைமுறை வரும் 2017 ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தார். முன்னதாக ரயில் விபத்துகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் இழப்பீடு விதிகளில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால், 19 ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே இழப்பீடு தொகை அதிகரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||