அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை வானகரத்தில் நடந்தது. அதில், ஏகமனதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடார்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா சமாதிக்கு ஒ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் சென்றனர். அங்கு அந்த தீர்மானத்தை வைத்து, அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அங்கிருந்து போயஸ் கார்டன் சென்ற ஓ.பி.எஸ்., தீர்மான புத்தகத்தை சசிகலாவிடம் வழங்கினார்.
இதற்கிடையில், பொதுக்குழு கூட்டம் நடந்த மண்டபத்தின் வெளியே ஜெயலலிதா படம் மட்டும் இருந்த பேனர், உடனடியாக அகற்றப்பட்டு, பொது செயலாளராக பதவியேற்கும் சசிகலாவுக்கு,
ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிப்பது போன்றபடத்துடன் புதிய பேனரை சசிகலாவின் ஆதரவாளர்கள் வைத்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இன்று முதன்முறையாக அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. இதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||