t> கல்விச்சுடர் தடியடி நடத்தியது ஏன்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 January 2017

தடியடி நடத்தியது ஏன்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி


சென்னை: அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதுக்கு காரணம் என்னவென்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மகாதேவன்.,
போராட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம், அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் முத்து குமாரசாமி.,
கடந்த 19-ம் தேதி வரை மாணவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது மாணவர்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துவிட்டனர் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை டிஜிபி உறுதி செய்யவேண்டும் என்றும், எப்போது வரை போராட்டம் நடைபெற உள்ளது என்ற தகவலை தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், போராட்டகாரர்கள் மீது எவ்வித வழக்கும் பதியக்கூடாது என்று போலீசுக்கு உத்தரவிட முடியாது என்று நீதிபதி மகாதேவன் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை செவ்வாய் கிழமைக்கு (நாளை) ஒத்திவைத்தார்.

JOIN KALVICHUDAR CHANNEL