t> கல்விச்சுடர் இனி 3 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அதே அளவு தொகை அபராதம்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 February 2017

இனி 3 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அதே அளவு தொகை அபராதம்!

ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கருப்புப் பணப் புழக்கத்தை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கியது. அதனை தொடர்ந்து ரொக்க பணப்பரிமாற்றத்திற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து, ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 லட்ச ரூபாய்க்கு மேல் பணமாக பெற்றால் அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது போன்ற ரொக்க பரிமாற்றங்களில் பணத்தை வாங்குபவருக்கே இந்த அபராதம் விதிக்கப்படும் என்றும், எனினும் கூட்டுறவு வங்கிகள், வங்கிகள் போன்ற அரசு நிறுவனங்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL