t> கல்விச்சுடர் அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி கடந்து வந்த பாதை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 February 2017

அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி கடந்து வந்த பாதை


பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் எடப்பாடி கே.பழனிச்சாமி. தற்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும் அவர் ஆரம்ப நாள் முதலே ஜெயலலிதாவின் விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக அவர் பதவியேற்க வாய்ப்பிருக்கும் நிலையில் அவரைப் பற்றிய சில தகவல்கள்:
* 62 வயதான எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி நகரின், நெடுகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர். எடப்பாடி பழனிச்சாமி 1980-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.
* எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதில் ஜெயலிலதாவின் அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
* கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. கொங்கு மண்டலத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி வலுப்பெற முக்கிய பங்காற்றினார்.
* 1989-ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1991-ம் ஆண்டு மீண்டும் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.
* எடப்பாடி பழனிச்சாமி 1991, 2011, 2016 ஆம் ஆண்டுகளில், எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1998-ம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
* 1999 மற்றும் 2004-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
* 2011- 2016 ஜெயலிலதா தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அடிக்கடி அமைச்சகம் மாற்றப்பட்ட போதிலும் மாற்றப்படாத அமைச்சர்களில் ஒருவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார்.
* கடந்த மே மாதம் 2016-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு நான்காவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* தொடர்ந்து ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலத்திலுள்ள 11 தொகுதிகளில், அதிமுக 10 தொகுதிகள் வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.
* 2017-ம் ஆண்டு ஜெயலிலதாவால் பொதுப்பணித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
* ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்குப் பிறகு அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.


JOIN KALVICHUDAR CHANNEL