t> கல்விச்சுடர் உத்தரப்பிரதேசத்திலும் 10-ம் வகுப்பு தேர்வில் முறைகேடு: ஆங்கில தேர்வு ரத்து என அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 March 2017

உத்தரப்பிரதேசத்திலும் 10-ம் வகுப்பு தேர்வில் முறைகேடு: ஆங்கில தேர்வு ரத்து என அறிவிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெருமளவு மோசடி நடைபெற்றதையடுத்து ஆங்கில தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆங்கில தேர்வின்போது, மாணவர்கள் காப்பியடிக்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் உதவினர் என்பது புகார். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த முறைகேடு குறித்து உத்தரப்பிரதேச கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது 2 மையங்களில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து எழுதியதும், அவர்களுக்கு உறவினர்கள் உதவியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறு தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் மோசடி செய்த மாணவர்களையும், அவர்களுக்கு உதவிய பள்ளி ஆசிரியர்கள் சிலரையும் பிடித்து காவல்த்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

JOIN KALVICHUDAR CHANNEL