t> கல்விச்சுடர் அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் கவனமாக படிக்கவும். Be alert all govt staffs - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 March 2018

அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் கவனமாக படிக்கவும். Be alert all govt staffs



நமது ஆதார் எண், வங்கி கணக்கு எண், PAN நம்பர் ஆகியவை நமது ECS WEB
PAYROLL ( ONLINE SERVICE RECORD-S.R.) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. நாம்
வாங்கும் சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அந்த
சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமானவரி நமது பான் கார்டில் கட்டாயம் வரவு
வைக்கப்பட வேண்டும். நம்மிடம் சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமான வரி நமது அலுவலக TAN நம்பரில் சேர்ந்து இருக்கும்.  நமது அலுவலக DDO (TAN)
நம்பரில் இருக்கும் வருமான வரி பிடித்தத்தை PAN நம்பருக்கு மாற்ற
கட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q ஒவ்வொரு காலாண்டுக்கும் தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு முடிவில் Form-16 நாம் பெறவேண்டும். இதை
வலியுறுத்தி நமது தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசாணை (G.O.880
DT:12.12.2014, G.O.843 DT; 15.12.2015) வெளியிட்டுள்ளது. இதுவரை நாம்
Form-16 வாங்கவில்லை எனில் நம்மிடம் பிடிக்கப்பட்ட வருமான வரி நமது பெயரில் வரவு வைக்கப்படாமல் உள்ளது. அதாவது நாம் இதுவரை வருமான வரி
காட்டவில்லை என்று பொருள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q  தாக்கல்
செய்யாமல் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 200 அபராதம்
விதிக்கப்படும். இது சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பொருந்தும்.

உங்களிடம் பிடிக்கும் வரி பணம் அரசிடம் சரியாக போய்சேருகிறதா எண்பதை கண்டுபிடிப்பது எப்படி?


டிடிஎஸ் என்னும் வரிப்பணம் ஒவ்வொருவருடைய சம்பளத்திலிருந்து கண்டிப்பாக கழிக்கப்படும். இதை அந்தந்த நிறுவனமே பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யும் டிடிஎஸ் வரியில் ரூ.3,200 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. மேலும் 447 நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த டிடிஎஸ் வரியை அரசு கணக்கில் டெபாசிட் செய்யாமல் தங்களது தொழில் தேவைகளுக்காக பயன்படுத்தி உள்ளன என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. இப்போது ஒவ்வொரு நிறுவனமும் கண்டிப்பாக காலாண்டு (3 மாதம்) கணக்கில் வருமான வரித்துறையிடம் டிடிஎஸ்-ஐ பைல் செய்ய வேண்டும். மேலும் உங்களிடம் பிடிக்கும் வரி பணம் அரசிடம் சரியாக போய்சேருகிறதா எண்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதை பார்ப்போம். முதிலில் tax e-filing-என்ற வலைதளம் மூலம் உள்நுழைய வேண்டும். பின்பு உங்களுடைய சரியான ஐடி மற்றும் பாஸ்வர்ட் போன்றவற்றை அந்த வலைதளத்தில் பதிவிட வேண்டும். அடுத்து ஃபார்ம் 16 மற்றும் ஃபார்ம் 26ஏஎஸ்(AS) என்ற இரண்டு விருப்பங்கள் இருக்கும், ஃபார்ம் 16 பொறுத்தவரை சம்பள தொகையில் பிடிக்கப்பட்ட வரி குறித்த தகவல் இடம்பெற்றிருக்கும். அதன்பின்பு ஃபார்ம் 26ஏஎஸ் பொறுத்தவரை நீங்கள் வருமான வரித்துறையினரிடம் செலுத்திய வரித்தொகை குறித்த அரசு ஆவணங்கள் இடம்பெற்றிருக்கும். பின்னர் நீங்கள் ஃபார்ம் 26ஏஎஸ் -எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். ஃபார்ம் 26ஏஎஸ் உங்கள் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும், மேலும் இரண்டு ஃபார்ம்களின் தொகையும் ஒத்துப்போகவில்லை என்றால், உங்கள் நிறுவனம் உங்கள் கணக்கில் சரியாக வரி செலுத்தவில்லை என்று அர்த்தம். குறிப்பாக டிடிஎஸ் ரிட்டர்ன்ஸ் பைல் செய்த 10 நாட்களுக்குள் இதனை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஒத்துப்போகவில்லை என்றால், உடனடியாக வரி பிடித்தம் செய்பவர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். பின்பு TRACES வலைத்தளத்தில் இருந்து ஃபார்ம் 26ஏஎஸ்-ஐ எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடியும், குறிப்பாக இது உங்களின் வரி விவரங்களை சேமித்து வைத்திருக்கும். பான் எண்ணுடன் சரியான மொபைல் எண்ணை இணைத்திருந்தால், டிடிஎஸ் ரிட்டர்ன்ஸ் குறித்த எஸ்எம்எஸ்-ஐ வருமான வரித்துறையினர்

அனுப்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


JOIN KALVICHUDAR CHANNEL