t> கல்விச்சுடர் ஒரு ஆசிரியரின் கண்ணீர் கடிதம் .. இல்லை .. இல்லை .. கண்ணியமான கடிதம் தெளிவான கடிதம் .. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 February 2019

ஒரு ஆசிரியரின் கண்ணீர் கடிதம் .. இல்லை .. இல்லை .. கண்ணியமான கடிதம் தெளிவான கடிதம் ..



சுரேஷ்மணி அவர்களின்
மனதை நெகிழ வைக்கும்
பதிவு..

🚩நண்பனே உனக்காக

🙏25.01. 2019 நள்ளிரவு 1.30 மணிக்கு கதவினை காவலர் தட்டியபோது எனக்கு  வலிக்கவில்லை.

🙏எம் இனத்துக்கான போராட்டம் எனக் கருதி துணிவுடன்  புறமுதுகு காட்டாமல் இரண்டு சட்டை , முழுக்கால் சட்டையுடன்  வாருங்கள் செல்லலாம் என காவலர் அழைக்கும் போது எனக்கு வலிக்கவில்லை.

🙏என் மனைவி கண்ணீர் சிந்தும் போது எனக்கு வலிக்கவில்லை..

🙏நள்ளிரவில்
கைது செய்யப்பட்டு  சிறைக்கு தனி ஒருவனாய் நான்கு காவலர்களுடன் சென்ற போது எனக்கு வலிக்கவில்லை...

🙏 சிறையில் அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை காவலர் கண்காணிப்பில் இருந்த போது வலிக்கவில்லை.

🙏பிணையில் வர முடியாத 5 பிரிவுகளில் பொய் வழக்குகள் புனையப்பட்ட போது வலிக்க எல்லை..

🙏மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு  நீதிமன்றத்தில் அரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பிப்ரவரி 4ம் தேதி வரை (7 நாள் காவல்)சிறைக்காவல் என உத்தரவிட்ட போது வலிக்கவில்லை..

🙏மீண்டும் இரவு நாமக்கல் அழைத்து வரப்பட்டு
மருத்துவமனை பரிசோதனை செய்யப்பட்டு..

🙏இரவு 10.30 மணிக்கு புளித்த 4 இட்டலி சாப்பிட்டு விட்டு சேலம் மத்திய சிறைச்சாலை புறப்பட்ட போது வலிக்கவில்லை.

🙏இரவு 11 மணியில் இருந்து 12.30 மணி வரை வழக்குகள் பதியப்பட்டு கொடுங் குற்றவாளிகளைப் போல ஆடைகளை களைந்து பரிசோதனை செய்த போது வலிக்கவில்லை.

🙏28.1.2018 அன்று காலை சிறையில் அடைத்தபோது வலிக்கவில்லை.

🙏காலையில் 5 மணிக்கு சிறைவாசிகள் கணக்கெடுப்பு தூக்கத்தில் இருந்து எழுப்பி (உயிருடன் உள்ளனரா? என்ற சோதனை) கூட்டை விட்டு வெளியே வரும் பறவை போல வெளியே வந்து தட்டினை ஏந்தி சிறையில் வழங்கப்படும் உணவினை (காலையில் தினமும் சாதம் தேங்காய் சட்னி 5 நாட்களும் ) வரிசையில் நின்று சாப்பிட்ட போது வலிக்கவில்லை.

🙏6 மாதம் பணியிடை நீக்கம் என்று கூறிய போதும் வலிக்கவில்லை.

🙏தொலைபேசி இல்லாமல் வெளியுலக தொடர்பில்லாமல் மனைவி, 
உறவினர்கள் பேச முடியாமல் தவித்த போது வலிக்கவில்லை.

🙏400 கைதிகளும் ஒற்றை கதவில்லா கழிவறையில் இயற்கை உபாதைகளை கழித்தபோது மனது வலிக்கவில்லை..

🙏கழிவறையின் வாசத்தை பொறுத்துக் கொண்டு சாப்பிட்ட போதும், கொசுக்கடியிலும் கடுங்குளிரிலும் படுத்துறங்கிய போதும் வலிக்க வில்லை.

🙏சிறையில் வழங்கப்படும் உணவினை சாப்பிட்டதால் ஏற்பட்ட வயிற்று உபாதைகளினால் பாதிக்கப்பட்ட போதும் வலிக்கவில்லை.

🙏ஒவ்வொரு மாவட்டத்தினரும் பிணை பெற்று எங்கள் அறையை விட்டு கிளம்பிய போதும் வலிக்கவில்லை.

🙏 இன்னும் சொல்லொனாத் துயரங்களையும் பொறுத்துக் கொண்டேன் .

🙏இவ்வளவு வலிகளையும் பொறுத்துக் கொண்டோம் .

🔥ஆனால் அரசு நிதி சார்ந்த எந்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படாது என்ற போது வலித்தது.

🔥பேச்சுவார்த்தையே கிடையாது என்று சொன்னதைக் கேட்டபோது வலித்தது.

🔥மக்களிடையே சம்பள உயர்வுக்காகத் தான் போராடுகிறார்கள் என்று மக்களிடையே பொய் பிரச்சாரத்தை பார்த்த போது வலித்தது.

🔥மக்களும் ஆசிரியர்களை பணியை விட்டு நீக்குங்கள் வேலையில்லாத ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு  பணியைத் தாருங்கள் என்ற எம்மினத்தின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய போது வலித்தது.

🔥இன்று ஓய்வு ஊதியத்திற்கு அவர்கள் போராடுகிறார்கள்  நாளை என் பிள்ளை அரசு வேலைக்கு வந்தால் அவனும் ஓய்வூதியம் கேட்டு போராடுவான் என்பதனை மறந்த மக்களை நினைத்த போது வலித்தது.

🔰இந்த வலிகளுக்கு தீர்வு என்ன?

🚩இனி நான் என் பள்ளியில் என் குழந்தைகளுக்கு பாடத்துடன் அரசியல் ., பொருளாதாரம் பற்றி கற்பிப்பேன் .

🚩இதனால் ஏற்படும் தீமைகளை வெளிக்கொண்டு வருவேன்.

📌நல்ல முடிவினை மாணவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் .

🚩பொதுமக்களிடமும் தினமும் மாலை ஒரு 10 நிமிடமாவது எடுத்துச் சொல்வேன்.

📌ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது .

⭕இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் கழித்தாவது வெல்லும்.

🛑 மாற்றம் வேண்டும் மாற்றுவோம்
நாம் யார் என்பதை காட்டுவோம்
காட்டுவேன்.

சுற்றும் வரை பூமி சுடும் வரை நெருப்பு
போராடும் வரை மனிதன்
நீ மனிதன்

(நான் மனிதன்)

-வைரமுத்து

✍ நான் தோற்றுப் போகலாம் அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல

- சேகுவேரா

*நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? -பாரதி

போராட்டம்

மறியல்

கைது

காவல்

ரிமாண்ட்

சிறை

தற்காலிக பணி நீக்கம்

பெயில்

விடுதலை

அனைத்தையும்

தாங்க முடிகிறது..

கோரிக்கையை

வெல்லாததும்

பணியை செய்ய

இயலாத நிலையும்

கடக்க கடினமாகிறது....

  என்றும் நீங்கா நினைவுகளுடன்
என்றும் உங்களில் ஒருவன்.

சுரேஷ்மணி
நாமக்கல்..


JOIN KALVICHUDAR CHANNEL