t> கல்விச்சுடர் பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 August 2019

பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு


தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வெழுதி மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.


இந்தப் பட்டியல், scan.tndge.in என்ற இணையதளத்தில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.


இந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் புதன்கிழமை (ஆக.14) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL