. -->

Now Online

FLASH NEWS


Saturday 3 August 2019

வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. அரசுபள்ளி மாணவர்கள் நீட் தேர்வு பயிற்சியில் சேர தகுதித்தேர்வு - மறுபரிசீலனை செய்திடுக. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.



மாநிலத்தலைவர் 
பி.கே.இளமாறன் அறிக்கை :
  பள்ளிக்கல்வி 2019-2020 ஆம் கல்வியாண்டில் அரசு - அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்விற்கான பயிற்சியில் சேர 07.08.2019 அன்று தகுதித்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் நடைபெறும் தகுதித்தேர்வில் தோல்வியடைந்தால் அம்மாணவனின் எதிர்கால மருத்துவ கனவு முளையிலேயே கிள்ளி எறியும் முயற்சியாகும். இந்த தேர்விலே தேர்ச்சிப்பெற முடியவில்லையென்றால் எதிர்காலத்தில் தேர்ச்சியே பெறமுடியாது என்பதல்ல. அரசு மற்றும் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அரசே வடிக்கட்ட தீர்மானிப்பது வேதனையளிக்கிறது.ஏற்கனவே நீட் தேர்வு கூடாது என்பதுதான் பொதுவான நிலைப்பாடு அதுவரை அரசு நடத்தும் பயிற்சிக்கும் தகுதித்தேர்வென்பது வெந்தப்புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது.
  இனி எப்போதும் மருத்துவப்படிப்பு இல்லாதவர்களுக்கு இல்லாமையே பதிலாகிவிடும். ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சியளிப்பது அரசின் கடமை. அரசே புறந்தள்ளிவிட்டால் அரசுப்பள்ளி மாணவர்களின் கனவு ஆரம்பத்திலேயே நசுக்கிவிடும் என்பதால் ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் நீட் மற்றும் ஜெ.இ.இ பயிற்சி வழங்கிட ஏதுவாக பள்ளிக்கல்வித்துறையின் முடிவினை மறுபரிசீலனை செய்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். 
பி.கே.இளமாறன் 
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசியர் சங்கம்