t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.10.2025 - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 October 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.10.2025




திருக்குறள்:

குறள் 782:

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு       

விளக்க உரை: 

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

பழமொழி :
Teamwork makes the dream work.    

குழு முயற்சி தான் கனவுகளை நிறைவேற்றும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி :

எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல, சிறப்பான ஆற்றலும் இருக்கத்தான் செய்யும்- கர்மவீரர் காமராஜர்

பொது அறிவு : 

01.பெங்களூர் நகரை 

வடிவமைத்தவர் யார்?

கெம்பே கவுடா (1526–1574) 

Kempe Gowda (1526-1574)

02.இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளின் தலைநகரம் எது?

            கவரட்டி - Kavaratti

English words :

Allowed -permitted


Aloud- clearly heard

Grammar Tips: 

 வன் தொடர் குற்றியலுகரம்/ மென் தொடர் குற்றியலுகரம் – ஒற்றெழுத்து மிகுதல் வேறுபாடு 
எ.கா 
எடுத்துச் சென்றான், எழுந்து சென்றான். இந்த எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள். இவை இரண்டும் வினைச்சொற்கள். எடுத்து-க்கு வலிமிகுந்தது. எழுந்து-க்கு வலி மிகவில்லை.

இலக்கணத்தில் குற்றியலுகரம் பற்றி அறிந்திருப்போம். எடுத்து, எழுந்து ஆகியன உகரத்தில் (து) முடிவதால் இவை குற்றியலுகரச் சொற்கள்.

எடுத்து என்பதில் கடைசி எழுத்துக்கு முன்னுள்ள எழுத்து வல்லின மெய் என்பதால், அது வன்தொடர்க் குற்றியலுகரம். எழுந்து என்பதில் கடைசிக்கு முன்னெழுத்து மெல்லின மெய் என்பதால் மென்தொடர்க் குற்றியலுகரம்.

வன் தொடர்க் குற்றியலுகரத்திற்கு வலிமிகும். 'எடுத்துச் சென்றான்' என்று வந்தது. மென் தொடர்க் குற்றியலுகரத்திற்கு வலிமிகாது.

'எழுந்து சென்றான்' என்றானது.

அறிவியல் களஞ்சியம் :

 பல நறுமணம் வீசும் மலர்கள், பழங்களின் வாசனையுடன் இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள் சோப்புகளை உற்பத்தி செய்கின்றன. இந்த வாசனை சோப்புகளைப் பயன்படுத்தும் மனிதர்களிடம் அதே போன்ற வாசனை வீசுகிறது. இரத்தம் குடிக்காமல் அதை ஈடு செய்ய அவதிப்படும் கொசுக்கள் அதற்கு ஈடாக இந்த நறுமணத்தை அறிந்து தேன் கிடைக்கும் என்று கருதி வாசனையுடன் இருக்கும் மனிதர்களைக் கடிக்கின்றன என்று வெர்ஜீனியா பாலிடெக்னிக் கழகம் மற்றும் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரும், ஆய்வுக்குழுவின் தலைவருமான க்ளெமெண்ட் வினோஜர் (Clement Vinauger) கூறுகிறார்.

அக்டோபர் 13

1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிரீன்விச் (Greenwich) தெரிவு செய்யப்பட்டது.
நீதிக்கதை

நாளைய உணவு



சில வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதீர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும் என்றது.

அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும் அதைச்சாப்பிடு, இதைச்சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம் என்றது காட்டமாய். ஆனால் வெள்ளாடு, தன் குட்டிகள் நுனிக் கொழுந்தை கடிக்கவிடாமல் கவனமாய் பார்த்துக்கொண்டது. 

சில நாட்கள் சென்றன. செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில் ஒரு இலை தழைக்கூட காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? ஆனால், வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள் காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து வளர்ந்திருந்தன. வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின. ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன.

அடுத்தவர் பேச்சைக் கேட்பதா...? என நினைத்த செம்மறி ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவை பாதுகாக்கத் தெரியாததால், அவைகள் வேறு இடம் தேடிச் சென்றன. இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக, அவற்றை வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய உணவாகக் கூட இருக்கலாம் என்பதை செம்மறி ஆடுகள் உணர்ந்து கொண்டன.



நீதி :

சேமிக்க பழக வேண்டும். 

இன்றைய செய்திகள்

13.10.2025

⭐பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூல்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

⭐குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்- முதலமைச்சர் பெருமிதம்.

⭐அமெரிக்கா - எகிப்து இணைந்து நடந்தும் காசா போர் நிறுத்த உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 80 ரன் குவிப்பு: இரண்டு முக்கிய சாதனைகள் நிகழ்த்திய ஸ்மிரிதி மந்தனா. ஒரே வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.மேலும், இந்தப் போட்டியில் அவர் 58 ரன்களைக் கடந்த போது, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த ஐந்தாவது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். அதிலும், 5000 ரன்களை குறைந்த போட்டிகளில் எட்டிய வீராங்கனை என்ற உலக சாதனை படைத்தார்.

Today's Headlines

TODAY'S HEADLINES*

⭐Collection of tuition fees through UPI in schools - Central Government instructs states 

⭐Breakfast program to improve children's health - Chief Minister is proud.

⭐US-Egypt joint summit to ceasefire Gaza war invites PM Modi to participate in that summit.

 *SPORTS NEWS* 

🏀 Smriti Mandhana scores 80 runs against Australia. She made two important achievements 
* She crossed 1000 runs 
* with 58 runs she crossed 5000 runs.

.

JOIN KALVICHUDAR CHANNEL