. -->

Now Online

FLASH NEWS


Saturday 30 November 2019

நாட்டிலேயே முதல் முறையாக தனியார் ஆசிரியைகளுக்கும் 6 மாதம் பேறுகால விடுப்பு : கேரள அரசு உத்தரவு


இந்தியாவிலேயே முதன் முதலாக கேரளாவில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கும் 6 மாதம் பேறுகால விடுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய ேபறுகால விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. இது அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் பொருந்தும். ஆனால் இந்த சலுகை தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு கிடையாது. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக கேரளாவில், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு 6 மாத கால சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு 1000 சிகிச்சை உதவியும் அந்தந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2 மாதத்தில் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.