. -->

Now Online

FLASH NEWS


Friday 6 December 2019

எவ்வளவு சேமித்தாலும் வங்கி திவாலானால் 1 லட்சம் தான் கிடைக்கும்

வங்கி திவாலானால், அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் எவ்வளவு பணம் டெபாசிட் செய்திருந்தாலும் வாடிக்கையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரைதான் திரும்பக் கிடைக்கும் என வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உறுதி கழகம் (டிஐசிஜிசி) தெரிவித்துள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு டிஐசிஜிசி இந்த பதிலை அளித்துள்ளது.

டிஐசிஜிசி சட்டம் 1961-ன் பிரிவு 16 (1)ன்படி, ஒரு வங்கி திவாலானால், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த தொகையில் ஒவ்வொருவருக்கும், அவர் எவ்வளவு டெபாசிட் செய்திருந்தாலும், மூலதனம் மற்றும் வட்டியும் சேர்த்து அதிகபட்சமாக ₹1 லட்சம் மட்டும்தான் வழங்கப்படும்.

அதாவது, எவ்வளவு தொகை சேமித்திருந்தாலும், ஒரு லட்சத்துக்கு மட்டும் தான் காப்பீடு உள்ளது. அனைத்து வகை வர்த்தக வங்கிகள், இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள், உள்ளூர் வங்கிகள், மண்டல கிராம வங்கிகள் ஆகியவற்றுக்கும் டிஐசிஜிசி காப்பீடு பொருந்தும். இதுபோல், கூட்டுறவு வங்கிகளும், டிஐசிஜிசி சட்டம் பிரிவு ( 2)ன் கீழ் வைப்புத்தொகை காப்பீடு திட்டத்துக்குள் வந்துவிடும் என டிஐசிஜிசி கூறியுள்ளது.