t> கல்விச்சுடர் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு... பணிபுரியும்பள்ளிக்காக ஒரு ஆசிரியரின் வேண்டுகோள்..வைரல் செய்தி - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

26 December 2019

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு... பணிபுரியும்பள்ளிக்காக ஒரு ஆசிரியரின் வேண்டுகோள்..வைரல் செய்தி


.இனி ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போது பள்ளி வகுப்பறைகளின் வெளிச்சுவர்களிலும்
,உட்சுவர்களிலும் *தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்கள் மற்றும் வாக்காளர்களின் சின்னங்கள் ,பெயர்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டும் போது எளிதாக மறுபடியும் எடுக்கும் வண்ணம் குறைவான பசைகளைக் கொண்டு ஒட்டுங்கள்.

*ஏனெனில் சுவற்றிற்கு வெள்ளையடிப்பது போன்று பசையை தடவி ஒட்டுவதால்  வகுப்பறைகளில் பூசப்பட்ட வண்ணங்கள் அப்படியே பிய்ந்து வருகின்றது..

யோசித்து பாருங்கள் நம் இல்லமோ,நம் அலுவலகமோ எனில் இப்படி செய்வோமா???

*தற்போது அரசு மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் பல பள்ளிகள் புத்தம் புது வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன..
அதனை வேதனைப்படுத்த வேண்டாமே

எப்படியும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கண்டிப்பாக ஒரு ஆசிரியர் வாக்குச்சாவடி அலுவலராக பணி புரிவர்..இதனை உணர்ந்து எடுத்துக்கூறுங்கள்

*அனைத்துப் பள்ளிகளும் நம் பள்ளிகளே நம் பள்ளிகளும் நம் வீடுகளே


JOIN KALVICHUDAR CHANNEL