t> கல்விச்சுடர் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் முதல் நாளே மாணவர்களுக்கு தேர்வு? - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

4 January 2020

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் முதல் நாளே மாணவர்களுக்கு தேர்வு?





அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் நாளே தேர்வு எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜனவரி 2ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக இந்த முறை ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் 6 ந்தேதி பள்ளிக்கு செல்லும் முதல் நாளே, பத்தாம் வகுப்புக்கு முதல் ரிவிஷன் தேர்வு நடைபெற உள்ளது.

  ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வு  என்பதால், எந்த மாற்றமின்றி தேர்வு நடத்த, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


மேலும், 8 ம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் புதிதாக வழங்கப்பட உள்ளது.

 புத்தகங்களை வழங்கியபின், 2 மாதத்திற்குள் பாடத்திட்டங்களை முடித்து, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டியுள்ளது.

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50சதவிகித கேள்விகள் 3ம் பருவ பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாக உள்ள நிலையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே ரிவிஷன் தேர்வு தள்ளி வைக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

JOIN KALVICHUDAR CHANNEL