வாழ்த்துவோம் வாங்க*
*தேர்தல் களப்போராளிகள்
ஆசிரியர்கள் அனைவரும் அரசாங்கத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால்.... அது மிகையாகாது!
பாடப்புத்தகத்தினுடைய வாசனையை மட்டுமே மாணவர்களுக்கு உணர்த்துபவர்கள் என்பதையும் தாண்டி பிற பொது பணிகளிலும் முத்திரை பதிக்க முடியும் என நிரூபிப்பவர்கள்!
கல்விப்பணிக்காகவோ மற்றும் அரசாங்கத்தால் *இதனை இதனால்* *இவன் செய்வான்* என நினைத்து ஆணையிடும் பணிகள் அனைத்தையும் சிரமேற்கொண்டு *அரசகட்டளையை* ஆண்டவனின் ஆணையாகவே எண்ணி நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி சளைக்காமல் ஓடி ஓடி உழைத்து தங்களின் *சமூக அக்கறையை* மிக ஆழமாக விதைப்பவர்கள்!
இந்த அரையாண்டு விடுமுறையில் தேர்தல் பணியினை ஏற்றேயாக வேண்டிய சூழலில்... விடுமுறையிலிருக்கும் பிள்ளைகளை உறவினர் வசம் ஒப்படைத்து அவர்களை *பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு* எந்த சூழலையும் பொருட்படுத்தாது பற்பல முறையிலும் பல்வேறு வகையிலும் ஏற்பட்ட உடல் உபாதைகள் + மன உளைச்சல்களையும்
தாங்கிக் கொண்டு உதிரத்தின் துளிகளை மனதில் சிந்திக்கொண்டு கருமமே கண்ணெனக் -
_ கொண்டு கருத்தாய் செயல்பட்டார்கள்! ஆசிரியர்களுக்குத் தெரிந்த ஒரே உலகம் *பள்ளிக்கூடம் மட்டுமே* என்று பிறர் கருதுவதைத் தாண்டி மக்களிடையில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினார்கள்! பாதை சற்றே கடினமானாலும் பயணித்தேயாக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இன்முகத்தோடு செயல்பட்டார்கள்!
*முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்புக்குச் சென்றநாள் முதல் நேற்று காலை தொடங்கி இன்று அதிகாலை வாக்குத்தாள் வகை பிரிப்பு மற்றும் எண்ணிக்கை வரை சிறப்புடன் கூடிய முழு ஈடுபாட்டுடன் செய்தனர்!* முதல் ஒருநாள் பணியிலேயே துவண்டு விடாமல்.... ஒவ்வொரு நாளுமே தனக்குத்தானே Come back கொடுத்துக் கொண்டு ஒவ்வொரு அரசுப் பணியுமே ஒரு அனுபவம் என் மனதார
உணர்ந்து செயல்பட்டார்கள்! குறையாத ஊக்கத்துடன் தொடர்ந்து போராடக் கூடிய இராணுவ வீரர்களுக்கிணையான போராட்ட குணத்தோடு களமிறங்கி பணியாற்றினர்!
இனிவரும் காலங்களில் *தேர்தல் பணி* மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி இன்ன பிற *அரசுப் பணிகள்* என்றாலே மிரண்டோடுகின்ற மனநிலை தனக்குள் வந்துவிடக்கூடாது என்ற உறுதியை இந்த கால கட்டங்களில் உள்ளத்திலுருவாக்கிக் கொண்டார்கள்!
கல்வி கற்பிக்கும் ஆசிரியர் பணியை ஊதியத்துக்குரிய மற்றும் பிழைப்புக்குரிய பணியாக மட்டுமன்றி *பிரியத்துக்குரிய* பணியாக மாற்றிக்கொண்ட ஆசிரியர்களால் மட்டும்
*அரசு வேலை கடவுள் வேலை; கடவுள் வேலை ஆசிரியர் வேலை* என்றெண்ணி செயல்பட முடியும்!
*ஆசிரியர்களின் இடைவிடாத பணி மென்மேலும் அவர்களுக்குப் பாராட்டுகளையும் சிறப்புகளையும் அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டி சக ஆசிரியர் என்ற முறையில் வாழ்த்துகிறேன்!