. -->

Now Online

FLASH NEWS


Saturday 1 February 2020

விரைவில் புதிய கல்விக்கொள்கை: அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்


புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு விரைவில் கொண்டு வரும் என்று பட்ஜெட் உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 


 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 
 இதில், கல்வித்துறையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். 
 கடந்த 2019ல் பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு தமிழகத்தில் உள்ள கலவியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 
 கல்வித்துறைக்கு 2020-21 பட்ஜெட்டில் 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.