t> கல்விச்சுடர் ரீ-சார்ஜ் செய்யாவிட்டாலும் நீடிக்கும் சேவை: ஏர்டெல் சலுகை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

31 March 2020

ரீ-சார்ஜ் செய்யாவிட்டாலும் நீடிக்கும் சேவை: ஏர்டெல் சலுகை


கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஏழை, எளிய மக்களின் நலனுக்காக, ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், ரீ-சார்ஜ் செய்யாவிட்டாலும் அழைப்பு துண்டிக்கப்படாது என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.

 அது மட்டுமல்லாமல் அவசர அழைப்பைக் கூட மேற்கொள்ள முடியாமல், குறைந்தபட்ச பண இருப்பு இல்லாதவர்களுக்கு ரூ.10-க்கு ரீ-சார்ஜ் செய்யப்படும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.
 ஏற்கனவே, பிஎஸ்என்எல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் ஏர்டெல்லும் இணைந்துகொண்டது.
 அதாவது, ஏப்ரல் 14-ம் தேதிக்குள் ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களின் வேலிடிட்டி முடிவடைந்துவிட்டாலும், அழைப்பு துண்டிக்கப்படாது, ஏப்ரல் 20-ம் தேதி வரை சேவை நீட்டிக்கப்படும்.

 அதே போல, ஸீரோ பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்சமாக 10 ரூபாய்க்கு டாக் டைம் ரீ-சார்ஜ் செய்யப்படும் என்றும், இந்த தொகையை ஏர்டெல் நிறுவனம் மீண்டும் பிடித்தம் செய்யாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த மோசமான சூழ்நிலையில், மக்கள் சமூகத்துடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்யவே ஏர்டெல் இந்த சலுகையை அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் தொழில்கள் முடக்கப்பட்டு, ஏராளமான கூலித் தொழிலாளிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில் இது அவர்களுக்கு ஓரளவு உதவும் எனறும் ஏர்டெல் நிறுவனத்தின் சந்தைப்பிரிவு மூத்த அதிகாரி ஷஷ்வத் ஷர்மா தெரிவித்துள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL