t> கல்விச்சுடர் தள்ளிவைக்கப்பட்ட அனைத்து பள்ளி தேர்வுகளையும் மே மாதம் மத்தியில் முடிக்க திட்டம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

31 March 2020

தள்ளிவைக்கப்பட்ட அனைத்து பள்ளி தேர்வுகளையும் மே மாதம் மத்தியில் முடிக்க திட்டம்


கொரோனா பிரச்சனை காரணமாக சி.பி.எஸ்.இ., மத்திய திறந்தவெளி கல்வி அமைப்புகள் மற்றும் பல்வேறு தேர்வு வாரிய பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஏப்ரல் 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் உடனடியாக தேர்வு நடத்தும் வாய்ப்பு இல்லை. எனவே ஊரடங்கு முடிந்ததும் தேர்வு நடத்துவது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர்.

 இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தள்ளி வைக்கப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்கலாம் என திட்டமிட்டு இருக்கிறோம். 14-ந்தேதி ஊரடங்கு நிறைவு பெற்றதும் இதுபற்றி அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்துவோம். அதில் முடிவு எடுக்கப்பட்டு தேர்வு தேதி அறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்த தேர்வுகளுக்கான பரீட்சை பேப்பர் திருத்தும் பணி நின்றுவிட்டது. அவையும் தொடங்கப்படும். அதன்பிறகு தேர்வு நடத்தப்படும் விடைத்தாள்களையும் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு ஜூன் மாதத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே தேசிய தேர்வு ஏஜென்சி (என்.டி.ஏ.) அறிவித்த தேர்வுகளுக்கான விண்ணப்ப காலத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 7 தேர்வுகளுக்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு தேதியை ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு முடிவு செய்ய உள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். இந்த தேர்வுகளும் மே மாதம் வாக்கில் நடைபெறும் என்று தெரிவித்தனர். ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் எல்லா பணிகளும் முடிந்துவிடும் என்று அவர்கள் கூறினார்கள்.

JOIN KALVICHUDAR CHANNEL